நேப்பியர்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜேம்ஸ் நீஷம் 48, கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 23, ஆடம் மில்ன் 16, டேரில் மிட்செல் 14 ரன்கள் சேர்த்தனர். வங்கதேசம் தரப்பில் ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்களையும் மெஹிதி ஹசன், முஸ்டாபிஸுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
135 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லிட்டன் தாஸ் 40, சவுமியா சர்க்கார் 22, நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 19, தவுஹித் ஹிர்டோய் 19, மெஹிதி ஹசன் 19 ரன்கள் சேர்த்தனர். டி 20 போட்டிகளில் நியூஸிலாந்து மண்ணில் வங்கதேச அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதற்கு முன்னர் நியூஸிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக 9 ஆட்டங்களில் விளையாடி வங்கதேசம் தோல்வி கண்டிருந்தது. தற்போதைய வெற்றியால் 3 ஆட்டங்கள் டி 20 தொடரில் வங்கதேச அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago