“ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது” - உலகக் கோப்பை தோல்வி குறித்து ஷமி

By செய்திப்பிரிவு

மொராதாபாத்: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியபோது ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது என இந்திய கிரிக்கெட் அணியின் பவுலர் மொகமது ஷமி தெரிவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. அதில் சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்தனர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், மொராதாபாத் நகரில் பத்திரிகையாளர்களை ஷமி சந்தித்தார்.

“இந்திய கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தபோது ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது. தொடரில் நாங்கள் உருவாக்கி வைத்திருந்த வெற்றி பயணத்தை இறுதி வரை தொடரவும், இறுதிப் போட்டியில் வெற்றி பெறவும் நூறு சதவீதம் முயற்சித்தோம். ஆனால், இறுதிப் போட்டியில் எங்கே தவறு செய்தோம் என்பதை விவரிக்க முடியாது” என அவர் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய பவுலராக ஷமி அசத்தி இருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்