மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது அக்காவிடம் அடி வாங்கிய சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.
இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, இன்ஸ்டாகிராமில் அதிகம்பேர் பின்தொடரும் இந்திய ஆளுமை. மேலும் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நபர்களில் ஒருவராக இருக்கும் விராட், சிறு வயதில் ஐம்பது ரூபாயை வீணடித்த ஒரு கதையை பகிர்ந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
வீட்டில் தனக்கு கொடுத்த ஐம்பது ரூபாயை எப்படி செலவழித்தார் என்பதை வீடியோ சாட் ஒன்றில் பகிர்ந்துள்ளார் விராட் கோலி. அந்த வீடியோவில், “திருமணங்களில் மக்கள் நடனமாடுவதையும், நடனமாடும்போது பணத்தை வீசுவதையும் நான் பார்த்துள்ளேன். அப்படி பணத்தை எறிந்து நடனமாடுவதில் வித்தியாசமான மகிழ்ச்சி இருப்பதாக நினைத்து ஒருநாள் என் வீட்டில் எனக்கு கொடுத்த 50 ரூபாயை சிறு துண்டுகளாக கிழித்து நடனமாட ஆரம்பித்தேன். பணத்தை வாங்கியதும் வீட்டை விட்டு வெளியே வந்து ஐம்பது ரூபாயை கிழித்து வீசி நடனமாடினேன். நல்ல வேளையாக அன்று வேறு எந்த பொருட்களும் என் கையில் இல்லை" என்று வேடிக்கையாக பகிர்ந்துகொண்டார்.
இதே வீடியோவில் தனது அக்கா ஒருமுறை தன்னை அடித்த நிகழ்வையும் பகிர்ந்த விராட் கோலி, “என் அக்காவை ‘நீ’ என ஒருமையில் அழைக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. வழக்கம் போல் ஒரு நாள் அவரை ஒருமையில் அழைத்து பேசினேன். அன்று அவர் நான் ஒருமையில் பேசியதை மோசமாக உணர்ந்தாரோ என்னவோ என்னை அடித்துவிட்டார். அன்று அதிகமாக அடி வாங்கினேன். அந்த நாளுக்கு பின் அவரை ஒருமையில் அழைக்கவில்லை" என்று தெரிவித்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago