“கிரிக்கெட்டை தாண்டி ஷுப்மன் கில்லும் நானும் சிறந்த நண்பர்கள்” - இஷான் கிஷன்

By செய்திப்பிரிவு

மும்பை: கிரிக்கெட்டை தாண்டி ஷுப்மன் கில்லும் நானும் சிறந்த நண்பர்கள் என்று இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இப்போது அடுத்த தலைமுறை வீரர்களை அதிகம் கொண்டுள்ளது. இதில் அதிகம் கவனிக்கப்படும் வீரர்களாக உருவெடுத்துள்ளனர் ஷுப்மன் கில்லும் இஷான் கிஷனும். இருவரும் தங்கள் ஆட்டத்திறன் மட்டுமல்ல நல்ல நட்புக்காகவும் அறியப்படுகின்றனர். இவர்கள் இருவரின் நட்பு குறித்த வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இருவருமே ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, இருவருமே U19 அணியில் விளையாடும்போதில் இருந்து ஒன்றாக பயணித்து வருகின்றனர். இந்திய அணிக்கு தேர்வானதும் ஒரே நேரத்தில் தேர்வாகினர்.

சமீபத்தில் கவுன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்ற இஷான் கிஷான், ஷுப்மன் கில் உடனான தனது நட்பு குறித்து பேசினார். அதில், "கில்லும் நானும் சிறந்த நண்பர்கள். இந்தியா ஏ, இந்தியா பி மற்றும் இந்தியா சி போன்ற அணிகளில் விளையாடிய போது எங்கள் நட்பு தொடங்கியது. ஷுப்மன் கில் எனது அணியில் இணைந்து விளையாடினார்.

நாங்கள் இந்தியாவுக்கு வெளியே சுற்றுப்பயணங்களுக்குச் செல்லும்போதெல்லாம், ஒன்றாகச் சாப்பிடுவோம், ஒன்றாக இடங்களை சுற்றிப்பார்க்க செல்வோம். ஒன்றாக அதிக நேரம் செலவிடத் தொடங்கியதால் கில் உடனான நட்பு அதிகமானது. இப்போது கிரிக்கெட்டை தாண்டியும் நட்பாகியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்