தென் ஆப்பிரிக்காவில் வெற்றி பெற கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும்: ராகுல் திராவிட் கருத்து

By செய்திப்பிரிவு

செஞ்சுரியன்: தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வெல்வதற்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைபயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிதென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 31 வருடங்களாக தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்வதற்கு போராடி வருகிறது. 1992-ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி 8 முறை டெஸ்ட்தொடர்களில் விளையாடி உள்ளது. இதில் ஒரு முறை கூட இந்தியஅணி தொடரை வென்றது இல்லை.

2010-2011-ம் ஆண்டு தொடரை மட்டும் 1-1 என டிராவில் முடித்திருந்தது. மற்ற 7 தொடர்களையும் தென் ஆப்பிரிக்க அணியே வென்றிருந்தது. ஒட்டுமொத்தமாக தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 4 ஆட்டங்களில் மட்டுமே இந்திய அணி வெற்றி கண்டது. அதிலும் ஒரு தொடரில் ஒரு ஆட்டத்துக்கு மேல் இந்திய அணி வெற்றி பெற்றது இல்லை.இதற்கு இம்முறை தீர்வு கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறியதாவது:

தென் ஆப்பிரிக்க மண்ணில் இரு முறை, நாங்கள் தொடரை கைப்பற்ற நெருங்கினோம். இங்கு சிறந்த கிரிக்கெட்டை விளையாடி உள்ளோம். வலுவான போட்டியை கொடுக்க வேண்டுமானால் சில முக்கியமான தருணங்களில் 30 முதல் 50 ரன்களை சேர்க்க வேண்டும். அதேவேளையில் கடந்த தொடரில் இங்கு பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டோம். இது எங்களிடம் உள்ள தாக்குதல் பந்து வீச்சு மூலம் தென் ஆப்பிரிக்க மண்ணில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் எங்களுக்கு உள்ளது என்ற நம்பிக்கையை அளிக்கிறது. இந்த சூழ்நிலையில் உங்களுக்கும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை.

பேட்டிங்கின் போது ஒழுக்கத்துடனும் தேவைப்படும் போது பொறுமையாகவும் செயல்பட வேண்டும். தென் ஆப்பிரிக்க சூழ்நிலைகளில் ஒருபோதும் நாம்ஆட்டத்தில் முன்னிலையில் இருக்கிறோம் என கருத முடியாது.

பேட்ஸ்மேன்கள் 30 முதல் 40 ரன்களை சேர்த்திருக்கும் போது களத்தில் இருப்பதாக உணரலாம். ஆனால் அதை மிகவும் குறிப்பிடத்தக்க ஸ்கோராக மாற்றினால், அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற சிறிய விஷயங்களில் தென் ஆப்பிரிக்கா போன்ற வலுவான அணிக்கு எதிராக சரியாக செயல்பட வேண்டும். அவர்கள், இங்குள்ள சூழ்நிலைகளில் எப்படி விளையாட வேண்டும் என்பதை அறிந்த வலுவான அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், எங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன். இவ்வாறு ராகுல் திராவிட் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்