புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (டபிள்யூஎஃப்ஐ) தலைவராக பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதைக் கண்டித்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தான் பெற்ற கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை அரசிடம் திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாஜக எம்.பியும், மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷண் மீது குற்றச்சாட்டு எழுந்தது. சாக்சி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டம் நடத்தியதையடுத்து பிரிஜ் பூஷண் பதவி விலகினார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் பிரிஜ் பூஷணின் ஆதரவாளர் சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளனத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதற்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் பூனியா, வீரேந்தர் சிங் ஆகியோர் தாங்கள் பெற்ற மத்திய அரசின் விருதுகளை மத்திய அரசிடமே திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்தனர்.இதனிடையே மல்யுத்த சம்மேளன நடவடிக்கைகளை நிறுத்துவதற்காக சம்மேளனத்தை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்வதாக மத்திய விளையாட்டு மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது. இந்நிலையில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தான் பெற்ற கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை மத்திய அரசிடம் ஒப்படைப்பதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது: நான் பெற்ற மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை மத்திய அரசிடம் ஒப்படைக்கிறேன். இவ்வாறு வினேஷ் போகத் கூறியுள்ளார். இத்தகவலை சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்திலும் அவர் வெளியிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago