61வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்  போட்டி: தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றது

By செய்திப்பிரிவு

சென்னை: 61வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 29 தங்கம், 32 வெள்ளி, மற்றும் 22 வெண்கலம் பதக்கங்கள் உடன் 263 புள்ளிகளுடன் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

61வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்-2023 போட்டியை தலைமை தகவல் ஆணையர் ஷீலா பிரியா மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் கூட்டமைப்பு தலைவர் துளசி ராம் அகர்வால், செயலாளர் நரேஷ் குமார் ஷர்மா ஆகியோர் டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைத்தனர். இந்த போட்டிகளை தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் ஸ்பீட் மற்றும் ஆர்ட்டிஸ்டி ஏற்பாடு செய்திருந்தது. சென்னை மேடவாக்கத்தில் கடந்த 11ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஆர்ட்டிஸ்டி மற்றும் புதிய விளையாட்டு போட்டிகள் நடந்தன. இந்தியா முழுவதும் உள்ள 27 மாநிலங்கள் இந்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றன.

ரோலர் ஹாக்கி, இன்லைன் ஹாக்கி இன்லைன், ஃப்ரீஸ்டைல் போட்டிகள் சண்டிகரில் நடைபெற்றன. இந்த போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 4000 ஸ்கேட்டர்கள் கலந்து கொண்டனர். சென்னையில் நடந்த ஸ்பீட் மற்றும் ஆர்ட்டிஸ்டி நிகழ்வுகளுக்கான போட்டிகளில் ஸ்கேட்டர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு அணி 29 தங்கம், 32 வெள்ளி, மற்றும் 22 வெண்கலம் பதக்கங்கள் உடன் 263 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. 126 புள்ளிகளுடன் கர்நாடகா இரண்டாவது இடத்தையும், 65 புள்ளிகளுடன் உ.பி. மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE