சென்னை: சென்னையைச் சேர்ந்த ஃபிரெஷ்ஒர்க்ஸ் இன்க் நிறுவனம், தி சென்னை ரன்னர்ஸ் அமைப்பு ஆகியவை ஒருங்கிணைந்து, சென்னை மாரத்தான் நிகழ்வின் 12-வது பதிப்பை வரும் ஜனவரி 6-ம் தேதி சென்னையில் நடத்துகின்றன. முழு மாரத்தான் (42.195 கி.மீ), பெர்ஃபெக்ட் 20 மைலர் - (32.186 கி.மீ), அரை மாரத்தான் (21.097 கி.மீ) மற்றும் 10 கி.மீ. ஓட்டம் என 4 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது.
முழு மாரத்தான் போட்டியானது மெரினா கடற்கரை வழியாக நேப்பியர் பாலத்திலிருந்து தொடங்கி கலங்கரை விளக்கத்தை சென்றடையும். அதன்பிறகு இது, மத்திய கைலாஷ், டைடல் பார்க் ஆகியவற்றைக் கடந்து கிழக்கு கடற்கரை சாலையை சென்றடையும். பெர்ஃபெக்ட் 20 மைலர், 10 கி.மீ. ஓட்டம் ஆகியவையும் நேப்பியர் பாலத்திலிருந்து ஆரம்பமாகும். எலியட்ஸ் கடற்கரை பகுதி அரை மாரத்தான் நிகழ்வு தொடங்கும் இடமாக இருக்கும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago