சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்’ சாம்பியன்ஷிப் சென்னையில் நடைபெற்று வந்தது. கடந்த 15-ம் தேதி தொடங்கிய இந்தத் தொடரின் கடைசி மற்றும் 7-வது சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றன. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், சகநாட்டைச் சேர்ந்த மற்றொரு கிராண்ட் மாஸ்டரான ஹரிகிருஷ்ணாவை எதிர்த்து விளையாடினார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 31-வது நகர்த்தலின் போது டிரா செய்தார்.
மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, ஹங்கேரியின் சனான் சுகிரோவுடன் மோதினார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன் எரிகைசி 57-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். உக்ரைனின் பாவெல் எல்ஜனோவ், அமெரிக்காவின் லெவோன் அரோனியன் மோதிய ஆட்டம் டிரா ஆனது.
ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூ, செர்பியாவின் அலெக்சாண்டர் ப்ரெட்கேவை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் பர்ஹாம் மக்சூட்லூ 22-வது காய் நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். 7 சுற்றுகளின் முடிவில் டி.குகேஷ், அர்ஜுன் எரிகைசி ஆகியார் தலா 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தனர். இதைத் தொடர்ந்து டைபிரேக்கரில் குகேஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அர்ஜுன் எரிகைசி 2-வது இடத்தையும், ஹரிகிருஷ்ணா 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
பாவெல் எல்ஜனோவ் (4 புள்ளிகள்), லெவோன் அரோனியன் (3.5 புள்ளிகள்), பர்ஹாம் மக்சூட்லூ (3.5புள்ளிகள்), சனான் சுகிரோவ் (2.5 புள்ளிகள்), அலெக்சாண்டர் ப்ரெட்கே (1.5 புள்ளிகள்) ஆகியோர் 4 முதல் 8-வது இடங்களுடன் தொடரை நிறைவு செய்தனர்.
15 லட்சம் பரிசு: சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு ரூ.15 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த அர்ஜுன் எரிகைசிக்குரூ.10 லட்சமும், 3-வது இடம் பெற்ற ஹரி கிருஷ்ணாவுக்கு ரூ.8 லட்சமும் வழங்கப்பட்டது. சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ், ஃபிடே சர்க்யூட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார். மேலும் கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பையும் அதிகரித்துக்கொண்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago