7 அறிமுக வீரர்களுடன் ஆஸி. டெஸ்ட் தொடருக்கு செல்லும் மே.இ.தீவுகள்! - அதிர்ச்சியும் தாக்கமும்

By ஆர்.முத்துக்குமார்

ட்ரினிடாட்: மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டில் மற்றொரு அதிர்ச்சியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் 7 புதுமுக வீரர்களை தேர்வு செய்துள்ளது அந்த அணி நிர்வாகம்.

அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி. இதற்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அணியில் 7 புதுமுக வீரர்கள் இடம்பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை புதுமுக வீரர்கள் இடம்பிடிக்க காரணம், முன்னணி வீரர்கள் பலரும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விருப்பம் தெரிவிக்கவில்லை என்பதால்தான். ஆல்-ரவுண்டர்கள் ஜேசன் ஹோல்டர் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் விளையாட இருப்பதால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் தெரிவிக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் தோள்பட்டையில் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இப்படியான நிலையால் 7 புதுமுக வீரர்களை களமிறக்கியுள்ளது மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் நிர்வாகம். அணி தேர்வாளர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் "சில முன்னணி வீரர்கள் விளையாட விருப்பம் தெரிவிக்கத்தால் மேற்கிந்திய தீவுகள் அணி பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், நாடு முழுவதும் உள்ள சில புது திறமையான வீரர்களை அணியில் சேர்த்துள்ளோம்" என்றுள்ளார்.

கிரெய்க் பிராத்வைட் தலைமையிலான அணியில் இடம்பெற்றுள்ள 7 புதுமுக வீரர்கள் பின்வருமாறு: சக்கரி மெக்காஸ்கி (பேட்ஸ்மேன்), டெவின் இம்லாச் (விக்கெட் கீப்பர்), ஜஸ்டின் க்ரீவ்ஸ் (ஆல்-ரவுண்டர்), கவேம் ஹாட்ஜ் (ஆல்-ரவுண்டர்), கெவின் சின்க்ளேர் (ஆல்-ரவுண்டர்); அகீம் ஜோர்டான் (வேகப்பந்து வீச்சாளர்)மற்றும் ஷமர் ஜோசப் (வேகப்பந்து வீச்சாளர்.

இவர்கள் புதுமுக வீரர்கள் என்றாலும் முற்றிலும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு புதியவர்கள் அல்ல. இவர்கள் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியில் ஆடியவர்கள். இந்தத் தொடரில் மூன்று 4 நாள் போட்டிகள் நடைபெற்றது. அதில் ஆடி அனுபவம் பெற்றவர்கள்தான். ஆஃப் ஸ்பின் வீசும் ஆல்ரவுண்டர் சின்க்ளேர் 7 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும், 6 டி20 சர்வதேசப் போட்டிகளிலும் ஆடியவர். இவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஏ தொடரில் 44 ரன்கள் சராசரியுடன் திரும்பினார். இதோடு 12 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

அதே போல் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப்பும் ஏ தொடரில் 12 விக்கெட்டுகளுடன் ஓரளவுக்கு ஆர்வத்தை ஈர்த்தார். இவருடன் செல்லும் சக வேகப்பந்து வீச்சாளர் ஜோர்டானும் வங்கதேச ஏ தொடரிலும் தென் ஆப்பிரிக்க ஏ தொடரிலும் சிறப்பாக வீசியவர்தான். ஆல்-ரவுண்டர் கவேம் ஹாட்ஜ் தென் ஆப்பிரிக்கா ஏ தொடரில் அதிக ரன்களை எடுத்த 2வது வீரராகத் திகழ்ந்தார்.

அணியில் கேப்டன் கிரெக் பிராத்வெய்ட், அல்ஜாரி ஜோசப், தேஜ்நரைன் சந்தர்பால், ஜொஷுவா டி சில்வா, கிமார் ரோச் ஆகிய 5 சீனியர் வீரர்களே உள்ளனர். 1997க்குப் பிறகு மே.இ.தீவுகள் ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வென்றதில்லை. 16 டெஸ்ட்களில் 14 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது மே.இ.தீவுகள். கடந்த முறை மே.இ.தீவுகள் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் ஆடிய போது பெர்த்தில் 164 ரன்கள் வித்தியாசத்திலும் அடிலெய்டில் 419 ரன்கள் வித்தியாசத்திலும் படுதோல்வி கண்டது.

இந்நிலையில் இந்த புதுமுக வீரர்கள் கொண்ட மே.இ.தீவுகள் அணி அடிலெய்டில் பயிற்சி முகாமில் ஜனவரி 2-9 வரை பயிற்சி பெறுகிறது. ஜனவரி 10-13 கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியுடன் பயிற்சிப் போட்டியில் மோதுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 17ம் தேதி. இந்த முறை அடிலெய்டில் பகல் ஆட்டமாக நடைபெற பிரிஸ்பன் டெஸ்ட் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுகிறது. இந்தத் தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளுடன் 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளும் நடைபெறுகின்றன.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி வருமாறு: கிரெய்க் பிராத்வைட் (கேப்டன்), அல்ஜாரி ஜோசப், தேஜ்நரைன் சந்தர்பால், கிர்க் மெக்கென்சி, அலிக் அதானாஸ், கவெம் ஹாட்ஜ், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஜோசுவா டா சில்வா, அகீம் ஜோர்டான், குடகேஷ் மோட்டி, கிமார் ரோச், கெவின் சின்க்ளேர், டெவின் இம்லாக், ஷமார் ஜோசப், சக்காரி மெக்காஸ்கி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்