ரூ.24.75 கோடி உடன் ஸ்டார்க் ரிட்டர்ன் முதல் சிஎஸ்கே சர்ப்ரைஸ் வரை - ஐபிஎல் மினி ஏலம் ஹைலைட்ஸ்

By செய்திப்பிரிவு

துபாய்: ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த மினி ஏலத்தை வழிநடத்தினார் மல்லிகா சாகர். இதன்மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் முதல் பெண் ஏலம் விடுபவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற புதிய வரலாறு படைத்துள்ளார் சக அணி வீரர் மிட்செல் ஸ்டார்க். ஐபிஎல் தொடரில் விலகி இருந்த ஸ்டார்க் மீண்டும் ஐபிஎல் பக்கம் திரும்பி இருக்கும் நிலையில் அவரை ஏலத்தில் எடுக்க அணிகள் ஆர்வம் காட்டின. அவரை ரூ.24.75 கோடிக்கு வாங்கியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இதேபோல் சமீர் ரிஸ்வி என்ற அறிமுகமில்லாத வீரரை ரூ.8.4 கோடி கொடுத்து வாங்கி சர்ப்ரைஸ் அளித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். ஏலத்தின் முக்கிய அம்சங்கள்:

Unsold வீரர்கள்: இந்திய வீரர்கள் மனீஷ் பாண்டே, கருண் நாயர், ஆஸி வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை எந்த அணியும் வாங்க ஆர்வம் காட்டவில்லை. ஆப்கன் வீரர் முஜீப் ரஹ்மானை எந்த அணியும் வாங்கவில்லை. அவரின் அடிப்படை விலை ரூ.2 கோடி. மற்றொரு ஆப்கன் வீரர் முகமது வக்கார் சலாம்கெயில் UNSOLD வீரரானார். நியூஸிலாந்து ஸ்பின்னர் இஷ் சோதியை அணிகள் வாங்கவில்லை. இலங்கை கீப்பர் குஷல் மெண்டிஸை அணிகள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இங்கிலாந்து நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷீத்தை எந்த அணியும் வாங்கவில்லை.

மேற்கிந்திய தீவு வீரர் அகேல் ஹுஸைனை UNSOLD வீரரானார். இங்கிலாந்து கீப்பர் பிலிப் சால்ட்டை எந்த அணியும் வாங்கவில்லை. ஆஸியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட்டை எந்த அணியும் வாங்கவில்லை. உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர் சர்ப்ராஸ் கானை எந்த அணியும் வாங்க ஆர்வம் காட்டவில்லை. 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்த ராஜ் அங்கத் பாவாவையும் எந்த அணிகளும் வாங்கவில்லை. தென் ஆப்பிரிக்க வீரர் தப்ரைஸ் ஷம்சியின் அடிப்படை விலை ரூ.50 லட்சம் என அறிவிக்கப்பட்டது. எனினும் அவரை அணிகள் வாங்க விரும்பவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE