துபாயில் இன்று ஐபிஎல் மினி ஏலம் | மொத்தம் 77 வீரர்களை தேர்வு செய்ய ரூ.262.95 கோடியை செலவிட உள்ள அணிகள்

By செய்திப்பிரிவு

துபாய்: ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் நேரலையாக காணலாம்.

ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்த ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 333 வீரர்கள் உள்ளனர். இதில் வெளிநாட்டு வீரர்கள் 30 பேர் உட்பட மொத்தம் 77 வீரர்களை தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் ஏலம் எடுக்க உள்ளன. மொத்தம் உள்ள 333 பேர் பட்டியலில் 214 பேர் இந்திய வீரர்கள். மீதம் உள்ள 119 பேர் வெளிநாட்டு வீரர்கள். இதில் 2 வீரர்கள் ஐசிசி உறுப்பு நாடுகளை சேர்ந்தவர்கள்.இறுதிப் பட்டியலில் உள்ள வீரர்களில் 116 பேர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றவர்கள். மீதம் உள்ள 218 பேர் இதுவரை சர்வதேச போட்டியில் அறிமுகமாகாத வீரர்கள் ஆவர். இந்த ஏலத்துக்காக 10 அணிகளும் சுமார் ரூ.262.95 கோடியை செலவழிக்க காத்திருக்கின்றன.

இதுவரை நடைபெற்ற மினி ஏலங்களில் இதுவே அதிக தொகை செலவிடப்படக்கூடிய மினி
ஏலமாக இருக்கும் என கருதப்படுகிறது. ஒவ்வொரு அணியும் வைத்துள்ள கையிருப்பு தொகை, அவர்கள் நிரப்ப வேண்டிய இடங்கள் என்ன? என்பதை கீழே காண்போம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் | கையிருப்பு தொகை: ரூ.31.40 கோடி, நிரப்ப வேண்டிய இடங்கள்: 6 (3 வெளிநாட்டு வீரர்கள்), முக்கிய இடங்கள்: அம்பதி ராயுடுக்கு மாற்று வீரர் தேர்வு செய்யப்பட வேண்டும். மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடக்கூடிய இந்திய பேட்ஸ்மேனை ஏலம் எடுப்பதில் சிஎஸ்கே கவனம் செலுத்தக்கூடும். அந்த வகையில் அனுபவம் வாயந்த மணீஷ் பாண்டே தேர்வாக வாய்ப்பு உள்ளது. அதேவேளையில் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர், ஆல்ரவுண்டர் மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகியோர் மீதும் சிஎஸ்கேவின் பார்வை இருக்கக்கூடும். இந்த வகையில் ஷர்துல் தாக்குர், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரும் தேர்வாக வாய்ப்பு உள்ளது.

தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள்: எம்.எஸ்.தோனி, டேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்ய ரஹானே, ஷேக் ரஷீத், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், மொயீன் அலி, ஷிவம் துபே, நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், தீபக் சாஹர், மஹிஷ் தீக் ஷனா, முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பதிரனா.

மும்பை இந்தியன்ஸ் | கையிருப்பு தொகை: ரூ.17.75 கோடி, நிரப்ப வேண்டிய இடங்கள்: 8 (4 வெளிநாட்டு வீரர்கள்), மும்பை அணியின் கையிருப்பு குறைவாகவே உள்ளது என்பதால் தேசிய அணிக்கு அறிமுகம் ஆகாத வீரர்களை குறைந்த விலைக்கு வாங்குவதில் கவனம் செலுத்தக்கூடும். மானவ் சுதர், அசுதோஷ் சர்மா, தர்ஷன் மிசால் ஆகியோரை வளைத்து போடுவதில் கவனம் இருக்கக்கூடும். வெளிநாட்டு வீரர்களில் வனிந்து ஹசரங்காவை வாங்க வாய்ப்பு உள்ளது.

தக்க வைக்கப்பட்ட வீரர்கள்: ரோஹித் சர்மா, டெவால்ட் ப்ரெவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், ஷாம்ஸ் முலானி, நேஹல் வதேரா, ஜஸ்பிரீத் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | கையிருப்பு தொகை: ரூ.34 கோடி, நிரப்ப வேண்டிய இடங்கள்: 6 (3 வெளிநாட்டு வீரர்கள்), வெளிநாட்டு ஆல்ரவுண்டர், டாப் ஆர்டர் இந்திய பேட்ஸ்மேன், மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் ஆகியோரை தேர்வு செய்வதில் முனைப்பு காட்டக்கூடும்.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: அப்துல் சமத், எய்டன் மார்க்ரம், ராகுல் திரிபாதி, கிளென் பிலிப்ஸ், மயங்க் அகர்வால், ஹெய்ன்ரிச் கிளாசன், அன்மோல்பிரீத் சிங், உபேந்திர யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் சர்மா, மார்கோ யான்சன், வாஷிங்டன் சுந்தர், சன்வீர்சிங், புவனேஷ்வர் குமார், ஃபசல்ஹாக் பாரூக்கி, டி.நடராஜன், உம்ரான் மாலிக், மயங்க் மார்கண்டே.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | கையிருப்பு தொகை: ரூ.32.70 கோடி, நிரப்ப வேண்டிய இடங்கள்: 12 (4 வெளிநாட்டு வீரர்கள்), இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் இடங்களை நிரப்ப வேண்டியது உள்ளது. இந்த வகையில் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ரச்சின் ரவீந்திரா, ஹர்ஷால் படேல் உள்ளிட்டோர் மீது அணி நிர்வாகம் கவனம் செலுத்தக்கூடும்.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஸ்ரேயஸ் ஐயர், ஜேசன் ராய், அனுகுல் ராய், ஆந்த்ரே ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர், சுயாஷ் சர்மா, ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு | கையிருப்பு தொகை: ரூ.32.70 கோடி, நிரப்ப வேண்டிய இடங்கள்: 12 (4 வெளிநாட்டு வீரர்கள்), இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் இடங்களை நிரப்ப வேண்டியது உள்ளது. இந்த வகையில் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ரச்சின் ரவீந்திரா, ஹர்ஷால் படேல் உள்ளிட்டோர் மீது அணி நிர்வாகம் கவனம் செலுத்தக்கூடும்.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஸ்ரேயஸ் ஐயர், ஜேசன் ராய், அனுகுல் ராய், ஆந்த்ரே ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர், சுயாஷ் சர்மா, ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.

டெல்லி கேபிடல்ஸ் | கையிருப்பு தொகை: ரூ.28.95 கோடி, நிரப்ப வேண்டிய இடங்கள்: 9 (4 வெளிநாட்டு வீரர்கள்), உள்ளூர் போட்டிகளில் ரன் வேட்டையாடி உள்ள டெல்லி அணியைச் சேர்ந்த பிரியன்ஷி ஆர்யா, உத்தரபிரதேசத்தை சேர்ந்த சமீர் ரிஸ்வி, ஸ்வஸ்திக் சிக்கரா ஆகியோருடன் ஹர்ஷால் படேல், ஷர்துல் தாக்குர், ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஷ் இங்கிலிஸ், இலங்கையின் வனிந்து ஹசரங்கா ஆகியோரை ஏலம் எடுப்பதில் கவனம் செலுத்தக்கூடும்.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரிஷப் பந்த், டேவிட் வார்னர், பிரித்வி ஷா, யாஷ் துல், அபிஷேக் போரெல், அக்சர் படேல், லலித் யாதவ், மிட்செல் மார்ஷ், பிரவீன் துபே, விக்கி ஒஸ்வால், அன்ரிச் நோர்க்கியா, குல்தீப் யாதவ், லுங்கி நிகிடி, கலீல் அகமது, இஷாந்த் சர்மா, முகேஷ் குமார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | கையிருப்பு தொகை: ரூ.13.15 கோடி, நிரப்ப வேண்டிய இடங்கள்: 6 (2 வெளிநாட்டு வீரர்கள்), வேகப்பந்து வீச்சாளர்களான தென் ஆப்பிரிக்காவின் ஜெரால்டு கோட்ஸி, ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், இலங்கையின் தில்ஷான் மதுஷங்கா ஆகியோருடன் சையது முஸ்டாக் அலி தொடரில் 12 பந்துகளில் 50 ரன்கள் விளாசிய அசுதோஷ் சர்மா (உத்தரபிரதேசம்) மீதும் கவனம் செலுத்தக்கூடும்.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: கே.எல்.ராகுல், குயிண்டன் டி காக், நிகோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, தீபக் ஹூடா, கே.கவுதம், கிருணால் பாண்டியா, கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டாய்னிஸ், பிரேரக் மன்கட், யுத்வீர் சிங், மார்க் வுட், மயங்க் யாதவ், மோசின் கான், ரவி பிஷ்னோய், யாஷ் தாக்குர், அமித் மிஸ்ரா, நவீன்-உல்-ஹக்.

பஞ்சாப் கிங்ஸ் | கையிருப்பு தொகை: ரூ.29.10 கோடி, நிரப்ப வேண்டிய இடங்கள்: 8 (2 வெளிநாட்டு வீரர்கள்), ஷர்துல் தாக்குர், ஹர்ஷால் படேல், உமேஷ் யாதவ், ரச்சின் ரவீந்திரா உள்ளிட்டோர் மீது கவனம் செலுத்த வாய்ப்பு உள்ளது.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஷிகர் தவண், ஜிதேஷ் சர்மா, ஜானி பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டன், அதர்வா டைடே, ரிஷி தவான், சாம் கரன், சிக்கந்தர் ராஸா, ஷிவம் சிங், ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், காகிசோ ரபாடா, நேதன் எல்லிஸ், ராகுல் சாஹர், வித்வத் காவேரப்பா, ஹர்பிரீத் பாட்டியா.

ராஜஸ்தான் ராயல்ஸ் | கையிருப்பு தொகை: ரூ.14.50 கோடி, நிரப்ப வேண்டிய இடங்கள்: 8 (3 வெளிநாட்டு வீரர்கள்), உள்நாட்டு இந்திய பேட்ஸ்மேன்களான சமீர் ரிஸ்வி, ஸ்வஸ்திக் சிக்கரா, அசுதோஷ் சர்மா, அபிமன்யு சிங், சவுரப் சவுகான் ஆகியோரை ஏலம் எடுப்பதில் கவனம் செலுத்தக்கூடும்.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்லர், ஷிம்ரன் ஹெட்மயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், டோனோவன் பெரேரா, குணால் ரத்தோர், அஸ்வின், குல்தீப் சென், நவ்தீப் சைனி, சந்தீப் சர்மா, டிரெண்ட் போல்ட், யுவேந்திர சாஹல், ஆடம் ஸாம்பா, பிரசித் கிருஷ்ணா.

குஜராத் டைட்டன்ஸ் | கையிருப்பு தொகை: ரூ.38.15 கோடி, நிரப்ப வேண்டிய இடங்கள்: 8 (2 வெளிநாட்டு வீரர்கள்), ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு சென்றுவிட்டதால் அவரது இடத்தை நிரப்ப வலுவான ஆல்ரவுண்டர் தேவை. இதனால் ஷர்துல் தாக்aகுர், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் ஆகியோரு
டன், அல்ஸாரி ஜோசப், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் ஆகியோரை ஏலம் எடுக்க வாய்ப்பு உள்ளது.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: டேவிட் மில்லர், ஷுப்மன் கில், மேத்யூ வேட், ரித்திமான் சஹா, கேன் வில்லியம்சன், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் டெவாட்டியா, முகமது ஷமி, நூர் அகமது, சாய் கிஷோர், ரஷித் கான், ஜோஷ் லிட்டில், மோஹித் சர்மா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்