டெஸ்ட் அணியிலிருந்து இஷான் கிஷன் விலகல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய டெஸ்ட் அணியிலிருந்து இஷான் கிஷன் விலகியுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. டெஸ்ட்போட்டிக்கான அணியில் இஷான் கிஷனும் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து தான், தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிக் கொள்வதாக இஷான் கிஷன் பிசிசிஐ-யிடம் தெரிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் கே.எஸ். பரத், இந்திய அணியில் இணைந்து கொள்வார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, கே.எஸ்.பரத்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்