நவி மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குஎதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
நவி மும்பையில் உள்ள டி.ஓய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 94 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 410 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. சதீஷ் சுபா 69, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 68, கேப்டன்ஹர்மன்பிரீத் கவுர் 49, யஸ்திகா பாட்டியா 66 ரன்கள் சேர்த்தனர். தீப்தி சர்மா 60, பூஜா வஸ்த்ராகர் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 104.3 ஓவர்களில் 428 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தீப்தி சர்மா 67, ரேணுகாசிங் 1, ராஜேஷ்வரி கெய்க்வாட் 0 ரன்களில் வெளியேறினர். பூஜா வஸ்த்ராகர் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் லாரன் பெல்,சோஃபி எக்லெஸ்டோன் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து மகளிர் அணியானது 35.3 ஓவர்களில் 136 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக நாட் ஸ்கிவர்-பிரண்ட் 59, டேனி வயாத் 19, எமி ஜோன்ஸ் 12 ரன்கள் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சு வீராங்கனைகளானதீப்தி சர்மா 5, ஸ்நே ராணா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 292 ரன்கள்முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 42 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 33, ஸ்மிருதி மந்தனா26, யஸ்திகா பாட்டியா 9, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 27, தீப்தி சர்மா 20, ஸ்நே ராணா 0 ரன்களில் வெளியேறினர்.
» “சுயமரியாதை முக்கியம்” - ரோகித் சர்மா நீக்கம் குறித்து ரசிகர்கள் அதிருப்தி
» ஐபிஎல் 2024 | மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்
ஹர்மன்பிரீத் கவுர் 44, பூஜா வஸ்த்ராகர் 17 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் சார்லி டீன் 4, சோஃபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க 478 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய மகளிர் அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago