பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே பெர்த்தில் இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது, டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 346 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் வார்னர் 211 பந்துகளில் 16 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 164 ரன்களை விளாசினார். மிட்செல் ஜான்சன் இவரைப் பற்றி தப்பும் தவறுமாக உளறிக்கொட்டியதற்கு வார்னர் தன் மட்டையினால் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
பிட்சில் கொஞ்சம் புற்கள், ஈரப்பதம் இருந்தது. அப்போது பாகிஸ்தான் பவுலர்களால் இந்தப் பிட்சில் என்ன லெந்த்தில் வீசுவது என்று கண்டுப்பிடிக்க முடியாமல் திணறினர். எல்லா லெந்த்களிலும் வீசி வீசி கை வலி கண்டு விட்டனர். வெயில் அடித்து பிட்சில் பந்துகள் கொஞ்சம் எழும்பத் தொடங்கி அதிலும் சீரான முறையில் வீசுவதற்கான லெந்த்தை பாகிஸ்தான் பவுலர்கள் கண்டுப்பிடிக்கும் முன்னரே வார்னர் அதிரடி சதம் எடுத்துக் கடந்து சென்று விட்டார்.
ஆட்டத்தின் முடிவில் அலெக்ஸ் கேரி 14 ரன்களுடனும் டேஞ்சரஸ் மிட்செல் மார்ஷ் 15 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். பாகிஸ்தான் அணியில் அமிர் ஜமால், குர்ரம் ஷஜாத் என்ற இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் அறிமுகமாகி ஆடினர். பொதுவாக ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிக்கு எதிராக ஒரே போட்டியில் 2 புதுமுகங்களை இறக்குவது வழக்கமல்ல. ஆனால் பாகிஸ்தானின் அனுபவ பவுலர் ஹாரிஸ் ராவுஃப் பிபிஎல் ஆடுவதே போதும் டெஸ்ட் வேண்டாம் என்று விலகி விட்டார்.
பாகிஸ்தான் பீல்டிங்கும் படுமோசம், கவாஜாவுக்கு ஒரு கேட்ச், வார்னருக்கு ஒரு எளிதான கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் விடப்பட்டது, அதோடு மிஸ்பீல்டிங்குகளும் நிறைய இருந்தன. வார்னரைக் கண்டு பயப்பட்டு பந்து வீசினர் பாகிஸ்தான் பவுலர்கள். அவர் அப்பர் கட் பவுண்டரி மூலம் தனது 26வது டெஸ்ட் சதத்தை எடுத்து முடித்தார். இவரை வசைபாடிய மிட்செல் ஜான்சனும் மைதானத்தில் இருந்தார், அவருக்குத் தெரியும் படியாக வார்னர் தன் சதத்தைக் கொண்டாடினார். இந்த டெஸ்ட் தொடருடன் வார்னர் ஓய்வு பெறப்போவதாக செய்திகள் அடிபடுகின்றன. மேத்யூ ஹெய்டன், மைக்கேல் கிளார்க் இருவரையும் மொத்த ரன்கள் பட்டியலில் முந்தினார் வார்னர்.
பாகிஸ்தானுக்கு எதிராக 6வது டெஸ்ட் சதத்தை எடுத்த வார்னர் பாகிஸ்தானுக்கு எதிராக 90 ரன்களை சராசரியாக வைத்துள்ளார். பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் 14 டெஸ்ட் போட்டிகளில் உதை வாங்கியுள்ளது. இந்த டெஸ்ட் அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்றால் நிச்சயம் வைக்காது மாறாக பாகிஸ்தான் தோல்விதான் கண்களுக்கு இப்போதைக்குத் தெரிகிறது. புதிய கேப்டன் ஷான் மசூத் ஆஸ்திரேலியாவிடம் சிக்கினார் என்றே கருத வேண்டியுள்ளது.
ஷாஹின் அஃப்ரீடி ஒன்றும் வாசிம் அக்ரம் அல்ல என்று ரவி சாஸ்திரி கூறியது ஒருவேளை உண்மைதான் என்று நினைக்கும் அளவுக்கு அஃப்ரீடி லெந்த்தை கண்டுப்பிடிக்க முடியாமல் திணறி ஃபுல் லெந்த்தில் வீசி முதல் 4 ஓவர்களில் 31 ரன்களை விட்டுக் கொடுத்தார். அறிமுக பவுலரில் ஷசாத் உணவு இடைவேளைக்குப் பிறகு நன்றாக வீசினார். அதிரடியாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை இவர்தான் வீழ்த்தினார். லெந்த்தை ஷாஹின் அப்ரீடி கண்டுப்பிடித்த போது கவாஜாவை வீழ்த்தினார். ஜமாலும் கடைசியில் ஷார்ட் பிட்ச் பவுலிங் உத்திக்கு வந்து வார்னரைக் கழற்றினார். வார்னர் ஹூக் ஷாட்டில் கேட்ச் ஆனார் என்றால் ட்ராவிஸ் ஹெட் 40 ரன்களில் அப்பர் கட்டில் கேட்ச் ஆனார். ஷாஹின் அஃப்ரீடி திக்கித் திணறி 19 ஓவர்களில் 75 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
வார்னர் போட்டு புரட்டி எடுத்தார், உணவு இடைவேளைக்கு முன்னரே 72 ரன்களை விளாசியிருந்தார். இத்தனைக்கும் உள்நாட்டில் கடந்த 26 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு இப்போதுதான் கவாஜா, வார்னர் சதக்கூட்டணி அமைத்தனர். எப்படியோ முடிவில் சில விக்கெட்டுகளைக் கைப்பற்றி பாகிஸ்தான் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் உள்ளது, நாளையும் லெந்த்தைக் கண்டுபிடிக்க தவறினால், பீல்டிங் மோசமாக இருந்தால் நிச்சயம் மிட்செல் மார்ஷ் பதம் பார்ப்பார்.
இந்த டெஸ்ட் தொடருக்கு பாகிஸ்தான் அணி தங்களை சரியாகத் தயாரித்துக் கொள்ளவில்லை என்றே முதல் நாள் ஆட்டத்தில் தெரிந்தது. நாளை 2ம் நாள் ஆட்டத்தில் கட்டுக்கோப்புடன் வீசினால் நிச்சயம் ஆஸ்திரேலியாவை 400 ரன்களுக்கு மட்டுப்படுத்தலாம். பார்ப்போம்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago