WI vs ENG | முதல் டி20-ல் மே.இ. தீவுகள் வெற்றி

By செய்திப்பிரிவு

பிரிட்ஜ்டவுன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

பிரிட்ஜ்டவுனில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 19.3 ஓவர்களில் 171 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பில் சால்ட் 40, ஜாஸ் பட்லர் 39 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் ஆந்த்ரே ரஸ்ஸல் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

172 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 18.1 ஓவரில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ரோவ்மன் பவல் 15 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்களும் ஆந்த்ரே ரஸ்ஸல் 14 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

முன்னதாக பிரண்டன் கிங் 22, கைல் மேயர்ஸ் 36, ஷாய் ஹோப் 36, நிக்கோலஸ் பூரன் 13, ஷிம்ரன் ஹெட்மயர் 1, ரொமாரியோ ஷெப்பர்டு 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE