ஐபிஎல் கிரிக்கெட்டில் இம்பேக்ட் பிளேயர் விதியை நீக்க வேண்டும்: வாசிம் ஜாபர் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் (இம்பேக்ட் பிளேயர்) விதியை நீக்கவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாசிம் ஜாபர் கூறியதாவது: இம்பேக்ட் பிளேயர் விதியின் காரணமாக ஆல்-ரவுண்டர்கள் பந்துவீச ஊக்குவிக்கப்படுவதில்லை. இந்த விஷயம் தொடர்பாக இந்திய கிரிக்கெட்டில் கவனம் கொடுக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன்.

ஆல்-ரவுண்டர்களை பந்துவீச ஊக்கப்படுத்தாமல் அவர்களின் பந்துவீச்சுக்குத் தடையாக இருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் (இம்பாக்ட் பிளேயர்) விதி தேவையில்லை.

எனவே, அதை ஐபிஎல் தொடரிலிருந்து ஐபிஎல் நிர்வாகம் நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐபிஎல் போட்டியின்போது இம்பேக்ட் பிளேயர் விதியின்படி, போட்டி நடைபெறும்போது எந்த ஒரு அணியும் தங்களது 11 பேர் கொண்ட அணியில் உள்ள வீரர் ஒருவருக்குப் பதிலாக அவர்களது அணியில் உள்ள 5 மாற்று வீரர்களில் ஒருவரை களமிறக்கிக் கொள்ளலாம்.

போட்டிக்கு முன்னதாக டாஸ் வீசப்படும்போது ஒவ்வொரு அணியும் பிளேயிங் லெவனுடன் தங்களது 5 மாற்று வீரர்களின் பெயரையும் குறிப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE