ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி | கால் இறுதி சுற்றில் இந்திய அணி

By செய்திப்பிரிவு

கோலாலம்பூர்: ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 10-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தியது. தொடர்ந்து அடுத்த ஆட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் கனடாவுடன் மோதியது இந்திய அணி.

இதில் இந்திய அணி 10-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிசார்பில் ஆதித்யா (8 மற்றும் 43-வது நிமிடங்கள்), ரோஹித் (12, 55-வது நிமிடங்கள்), அமன்தீப் (23, 51-வது நிமிடங்கள்) ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்தனர்.

விஷ்ணுகாந்த் (42-வது நிமிடம்), ரஜிந்தர் (42-வது நிமிடம்), சவுரப் (51-வது நிமிடம்), உத்தம் (58-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது இந்திய அணி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 mins ago

விளையாட்டு

49 mins ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்