WI vs ENG | ஜேக்ஸ், சாம் கரண், லிவிங்ஸ்டன் அபாரம்: 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

By செய்திப்பிரிவு

ஆன்டிகுவா: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. பேட்டிங்கில் வில் ஜேக்ஸ் 73 ரன்களும், பந்து வீச்சில் சாம் கரண், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்களும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்தனர். இந்த வெற்றியால் 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் 1-1 என சம நிலையை எட்டி உள்ளது.

ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியானது இங்கிலாந்து பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 39.4 ஓவர்களில் 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடக்க வீரரான அலிக் அத்தானாஸ் 4 ரன்னில் கஸ் அட்கின்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து கீசி கார்ட்டி 0, பிரண்டன் கிங் 17, ஷிம்ரன் ஹெட்மயர் 0 ரன்களில் சாம் கரண் பந்தில் நடையை கட்டினர். 23 ரன் களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் கேப்டன் ஷாய் ஹோப், ஷெர்பான் ரூதர்போர்டு ஜோடி நிதானமாக விளையாடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றது.

129 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை லியாம் லிவிங்ஸ்டன் பிரித்தார். ஷெர்பான் ரூதர்போர்டு 80 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்த நிலையில் லியாம் லிவிங்ஸ்டன் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய யானிக் கரியாவை 5 ரன்னிலும், நிலைத்து நின்று விளையாடிய ஷாய் ஹோப்பை 68 ரன்னிலும் (பந்துகள் 68, சிக்ஸர் 1, பவுண்டரி 6) வெளியேற்றினார் லிவிங்ஸ்டன். இதன் பின்னர் மேற்கு இந்தியத் தீவுகள் அணி எஞ்சிய விக்கெட்களை விரைவாக பறிகொடுத்தது. ரொமாரியோ ஷெப்பர்ட் 19, அல்ஸாரி ஜோசப் 14, குடகேஷ் மோதி 6 ரன்களில் நடையை கட்டினர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் சாம் கரண், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் கஸ் அட்கின்சன், ரெஹான் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 203 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 32.5 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரரான வில் ஜேக்ஸ் 72 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் விளாசி ஷெர்பான் ரூதர்போர்டு பந்தில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான பில் சால்ட் 21 ரன்னில் ரொமாரியோ ஷெப்பர்ட் பந்தில் போல்டானார். இதன் பின்னர் களமிறங்கிய ஸாக் கிராவ்லி 3, பென் டக்கெட் 3 ரன்களில் குடகேஷ் மோதி பந்தில் நடையை கட்டினர். ஹாரி புரூக் 49 பந்துகளில், 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 43 ரன்களும் கேப்டன் ஜாஸ் பட்லர் 45 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 58 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது.

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்துள்ளது.

முதல் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை (9-ம் தேதி) பிரிட்ஜ்டவுனில் நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்