நியூஸிலாந்தை 2-1 என்று வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய பாக் மீண்டும் முதலிடம்

By ஏஎஃப்பி

மாங்கனூயில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி டி20 தொடரை 2-1 என்று கைப்பற்றியதோடு நியூஸிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தது.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 6 விகெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்களை எடுத்து தோல்வி தழுவியது.

அடுத்தடுத்து பெற்ற வெற்றியினால் கேப்டன் சர்பராஸ் அகமட் மகிழ்ச்சியில் குதித்தார்.

பேட்டிங்குக்கு சவுகரியமான பிட்சில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பகார் ஜமான் 36 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்தார். பின்னால் இறங்கிய உமர் அமின் 3 சிக்சர்களுடன் 21 ரன்களையும் ஆமீர் யாமின் 6 பந்துகளில் 15 ரன்களையும் விளாச கடைசி 4 ஓவர்களில் 58 ரன்கள் அடித்து நொறுக்கப்பட்டது.

தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து விரட்டலில் வெற்றி பெறும் நிலையில் இல்லை. எனவே 163/6 என்று முடிந்தனர். 2வது போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸி. அணி தோல்வி தழுவியது, இந்த ஆட்டத்தில் 18 ரன்களில் தோல்வி கண்டது. ஒருநாள் தொடரில் நியூஸிலாந்து அணி ஒயிட் வாஷ் அளித்தது.

அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 13 போட்டிகளில் தோல்வியடையாதிருந்த நியூஸிலாந்து அணி 2 டி20 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி அடைந்துள்ளதால் அடுத்த மாதம் நடைபெறும் ஆஸி. இங்கிலாந்து, நியூசிலாந்து முத்தரப்பு தொடருக்கான நியூஸிலாந்து அணியில் மாற்றங்களைக் கோரியுள்ளது.

பகார் ஜமான் மீண்டும் அருமையாக ஆடி 46 ரன்கள் எடுத்த நிலையில் சர்ச்சைக்குரிய கேட்சில் அவுட் தீர்ப்பளிக்கப்பட்டார். டிவி ரீப்ளேயில் பந்து தரையில் பட்டு கேட்ச் ஆனதா என்பது தெளிவாகத் தெரியவில்லை, அதாவது கேட்ச் தெளிவாக எடுக்கப்பட்டதா என்பதும் தெரியவில்லை, ஆனால் பகார் ஜமானுக்கு எதிராகத் தீர்ப்பு அமைந்தது.

நடு ஓவர்களில் நியூஸிலாந்து பாகிஸ்தானின் நல்ல துவக்கத்துக்கு முட்டுக்கட்டை போட்டது. சாண்ட்னர் மீண்டும் 4 ஓவர்களில் 24 ரன்களையே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆனால் இடது கை வீரர் உமர் அமின் களமிறங்கி அதுவரை படு சிக்கனமாக வீசிய இஷ் சோதி வீசிய ஒரு ஓவரின் முதல் 5 பந்துகளில் 21 ரன்களை விளாசினார். ஹாரிஸ் சொஹைல் 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார்.

ஓவருக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நியூஸிலாந்து தேவைப்படும் ரன் விகிதத்துக்கு அருகில் வர திணறியது. பாஹிம் அஷ்ரப், நியூஸி. கேப்டன் வில்லியம்சனை 1 ரன்னில் வீழ்த்தினார். மார்டின் கப்தில் பவுலர்களுடன் விளையாடி 43 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து 13-வது ஓவரில் வெளியேறினார். அவர் ஆட்டமிழந்தவுடன் வெற்றிக்கான ரன் விகிதம் ஓவருக்கு 13.57 என்று எகிறியது.

ராஸ் டெய்லர் 10 பந்துகள் சந்தித்து 25 ரன்களில் 3 சிக்சர்களை பறக்க விட்டார். ஆனால் 17வது ஓவரில் டெய்லர் ஆட்டமிழக்க நியூஸிலாந்து 128/5 என்ற நிலையிலிருந்து 163/6 என்று முடிந்தது. பாக் அணியில் ஷதாப் கான் 4 ஓவர்கள் 19 ரன்கள் 2 விக்கெட். பாஹிம் அஷ்ரப் 4 ஓவர்களில் அதிகபட்சமாக 55 ரன்களை விட்டுக் கொடுத்தார். மொகமது ஆமிர் சிக்கனம் காட்டி 23 ரன்களுக்கு 1 விக்கெட்டை வீழ்த்தினார். ஆட்ட நாயகன் ஷதாப் கான், தொடர் நாயகன் மொகமது ஆமீர். இந்தப் போட்டி 641-வது சர்வதேச டி20 போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்