துபாய்: ஐசிசி-யின் சர்வதேச டி 20 கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கானை பின்னுக்குத்தள்ளி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்.
23 வயதான ரவி பிஷ்னோய் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முடிவடைந்த 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 9 விக்கெட்கள் வீழ்த்தி சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் ஐசிசி தரவரிசையில் 699 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 692 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா, இங்கிலாந்தின் ஆதில் ரஷித் ஆகியோர் தலா 679 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். மற்றொரு இலங்கைசுழற்பந்து வீச்சாளர் தீக்சனா 677 புள்ளிகளுடன் 5-வது இடத்தைபிடித்துள்ளார். ரவி பிஷ்னோயை தவிர முதல் 10 இடங்களுக்குள் மற்ற இந்திய பந்து வீச்சாளர்கள் எவரும் இடம்பெறவில்லை. அக்சர் படேல் 9 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை அடைந்துள்ளார். பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடர்கிறார்.
அதேவேளையில் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் ஓர் இடம் பின்தங்கி 7-வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத போதிலும் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஹர்திக் பாண்டியா 3-வது இடத்தில் உள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago