யு-19 ஆசிய கோப்பை | ஆப்கானிஸ்தானுடன் இந்தியா நாளை மோதல்

By செய்திப்பிரிவு

துபாய்: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நாளை (8-ம் தேதி) தொடங்குகிறது. வரும்17-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம்,ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் தலா இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டங்கள் 15-ம் தேதி நடைபெறுகின்றன.

50 ஓவர் வடிவில் நடைபெறும் இந்த தொடரில் ‘ஏ’ பிரில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில்நாளை ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. தொடர்ந்து 10-ம் தேதி பாகிஸ்தானுடனும், 12-ம் தேதி நேபாளத்துடன் விளையாடுகிறது இந்திய அணி. இறுதிப் போட்டி 17-ம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. லீக் ஆட்டங்கள் அனைத்தும் ஐசிசி அகாடமி மைதானங்களில் நடைபெற உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்