மிர்பூர்: வங்கதேசம் – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்பூர் நகரில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
டிம் சவுதி தலைமையிலான நியூஸிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சில்ஹைட்டில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூஸிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது வங்கதேச அணி. இந்த வெற்றியால் வங்கதேசம் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
முதல் போட்டியில் வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ சதம் விளாசிஅசத்தியிருந்தார். அதேவேளையில் பந்து வீச்சில் தைஜூல் இஸ்லாம் இரு இன்னிங்ஸிலும் கூட்டாக 10 விக்கெட்களை வேட்டையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். இதனால் சொந்த மண்ணில் முதன்முறையாக நியூஸிலாந்து அணியை வீழ்த்தி வங்கதேச அணி சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் இன்று மிர்பூர் நகரில் மோதுகின்றன. நியூஸிலாந்து அணிக்கு எதிராக வங்கதேச அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. மிர்பூர் டெஸ்ட் போட்டியை டிரா செய்தாலே வங்கதேச அணி தொடரை 1-0 என வென்று சாதனை படைத்துவிடும். எனினும் அது அவ்வளவு எளிதானதாக இருக்காது என்றே கருதப்படுகிறது.
» சென்னை வெள்ளம் | “அனைவரும் பாதுகாப்பாக இருப்பதே முக்கியம்” - டேவிட் வார்னர்
» “எனது பகுதியில் 30 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இல்லை” - கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்வீட்
நியூஸிலாந்து அணி இதற்கு முன்னர் 3 முறை வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் 2 இரு முறை தொடரை வென்ற நிலையில் ஒரு முறை தொடர் 0-0 என டிராவில் முடிவடைந்திருந்தது. கடைசியாக வங்கதேச மண்ணில் நியூஸிலாந்து அணி கடந்த 2008-ம் ஆண்டு வெற்றி பெற்றிருந்தது.
இதன் பின்னர் அங்கு விளையாடிய 3 டெஸ்ட் போட்டியையும் நியூஸிலாந்து அணி டிராவில் முடித்திருந்தது. இதனால் இம்முறை 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 1-1 என டிராவில் முடிப்பதில் நியூஸிலாந்து அணி கவனம் செலுத்தக்கூடும். சில்ஹெட் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் கேன் வில்லியம்சன் மட்டுமே சிறப்பாக செயல்பட்டிருந்தார்.
முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய அவர், 2-வது இன்னிங்ஸில் விரைவில் ஆட்டமிழந்ததால் ஒட்டுமொத்த அணியும் சரிவை சந்தித்தது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சை பலப்படுத்தும் விதமாக 2-வது டெஸ்டில் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா சேர்க்கப்படக்கூடும். போட்டி நடைபெறும் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இஷ் சோதிக்கு பதிலாக மிட்செல் சாண்ட்னர் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago