தென் ஆப்பிரிக்க அணி வீரர்களுக்கு பும்ரா நெருக்கடி தருவார்: டிவில்லியர்ஸ் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர்களுக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா கடும் நெருக்கடி தருவார் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. டி20 தொடர் டிசம்பர் 10-ம் தேதி தொடங்கவுள்ளது. அதைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டித் தொடர் நடைபெறும். அதன் பின்னர் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ம் தேதி செஞ்சுரியனில் தொடங்கவுள்ளது. 2-வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி கேப்டவுனில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் சுற்றுப்பயணம் குறித்து முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ் நேற்று கூறியதாவது:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க வேண்டும் என்றால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமாக அமைந்துள்ளது. ஆனால் தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை.

ஆனால் இந்தத் தொடரில் தென்ஆப்பிரிக்க வீரர்களுக்கு கடும் சவாலாக ஜஸ்பிரீத் பும்ரா இருப்பார். அவர்களுக்கு கடும் நெருக்கடியை அவர் அளிப்பார். பும்ரா பந்து வீசத் தொடங்கினால், எதிரணி வீரர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்தவே மாட்டார். அவரிடம் அனைத்து திறமைகளும் உள்ளன.

கடந்த முறை இந்திய அணி வீரர்கள் தென் ஆப்பிரிக்காவில் விளையாடிய போது பும்ரா தான் தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டு இருந்தார். பும்ரா எந்த சூழலிலும் சிறப்பாக பந்து வீசக் கூடியவர். ஸ்டெம்பை நோக்கி பந்துகளை வீசுவதில் அவர் வல்லவர்.

இம்முறை ஒட்டுமொத்த இந்திய வேகப்பந்து வீச்சு படையும் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு பெரிய அளவிலான அச்சுறுத்தலைக் கொடுக்கும்.

இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்