இந்தியாவின் 84-வது கிராண்ட் மாஸ்டர் ஆனார் வைஷாலி ரமேஷ்பாபு!

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தியாவின் 84-வது கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார் வைஷாலி ரமேஷ்பாபு. இவர் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட் மாஸ்டர் ஆகவும் வைஷாலி திகழ்கிறார்.

எல்லோபிரேகாட் ஓபனின் போது 2500 ரேட்டிங்கை கடந்ததன் மூலம் கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார். இந்த தொடரை 2 வெற்றிகளுடன் அவர் தொடங்கி உள்ளார். துருக்கி வீராங்கனையை வீழ்த்தியதன் மூலம் அவர் ரேட்டிங்கில் முன்னேற்றம் கண்டார். 22 வயதான அவர் சர்வதேச மகளிர் சதுரங்க பட்டியலில் 11-வது இடத்தில் உள்ளார். இந்திய அளவில் 2-வது இடத்தில் உள்ளார்.

நடப்பு ஆண்டின் மகளிர் கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் தொடருக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE