டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகள்: பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா!

By ஆர்.முத்துக்குமார்

ராய்ப்பூரில் ஆஸ்திரேலிய அணியை 4-வது டி20 போட்டியில் வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்று கைப்பற்றியதை அடுத்து டி20 சர்வதேச போட்டிகளில் அதிக வெற்றிகளுடன் இந்தியா முதலிடம் வகித்து, பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

டி20 என்றாலே மகேந்திர சிங் தோனிதான் நினைவுக்கு வருவார். ஒருநாள் கிரிக்கெட் என்றால் 1983 உலகக் கோப்பை வென்ற கபில்தேவ் நினைவுக்கு வருவார். 2007-ல் இந்திய அணி கடினமான நிலையில் இருந்தபோது தோனி தலைமைப் பதவி ஏற்று, தென் ஆப்பிரிக்காவில் நடந்த முதல் டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல உறுதுணையாக இருந்தார். அதோடு ஐபிஎல் என்னும் ராட்சத பண முதலை கிரிக்கெட்டுக்கும் வித்திட்டார் என்றால் மிகையாகாது.

அதன் பிறகே நாடுகள் டி20 கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கின. டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் கடுமையான மாற்றங்கள் செய்யப்பட்டு அதன் ஒருபடித்தன்மையாக பேட்டர்களின் சொர்க்கமாக இன்று மாறிவிட்டது. பவுலர்கள் சிறுவர்கள் ஆக்கப்பட்டு விட்டனர். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இன்னும் கொஞ்சம் உயிர் இருக்கிறது. அதன் ஆக்சிஜனும் எப்போது பிடுங்கப்படும் என்று தெரியவில்லை.

இந்நிலையில், இந்த டி20 வடிவத்தில் இந்திய அணி 136 போட்டிகளில் வென்று 135 போட்டிகளில் வென்ற பாகிஸ்தான் அணி சாதனையை முறியடித்துள்ளது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பிரமாதமான வீரர்கள் சிலரை டி20 கிரிக்கெட் நமக்கு அளித்து வருகிறது. உற்சாகமான உத்வேகம் தரும் வீரர்கள் இப்போதெல்லாம் டி20 கிரிக்கெட்டில்தான் உருவாகிறார்கள்.

அந்த வரிசையில் இந்திய அணியில் இப்போது ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, திலக் வர்மா போன்ற வீரர்கள் புதிய உத்வேகமளிக்கின்றனர். முந்தைய வரிசையில் சஞ்சு சாம்சன் மீது பெரிய நம்பிக்கை எழுந்தது. ஆனால் பாவம் அவருக்குத் தொடர்ச்சியாக வாய்ப்பளிக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாய்ப்பளித்து விட்டு கடைசியில் அவரை ஓரங்கட்டவே முடிவெடுத்து விட்டனர்.

அதேபோல் மிகச்சிறந்த பினிஷராக உருவான ராகுல் திவேத்தியாவையும் பரிசீலிப்பதில்லை. அவர் ஒவ்வொரு ஐபிஎல் போட்டியிலும் அட்டகாசமாகவே ஆடுகிறார். ஆனால் இங்கு ஹை புரஃபைல் வீரர்களுக்கே இந்திய அணியில் இடம் கிடைக்கிறது. அதாவது, ஹை புரொபைல் ஐபிஎல் வீரர்களுக்குத்தான் இந்திய அணியில் இடம். அதனால்தான் சர்பராஸ் கான் இன்னும் நொந்து போய் வெளியே இருக்கிறார். உம்ரன் மாலிக் என்ற பியூர் டேலண்ட் முடக்கப்பட்டு கிடக்கிறது. வெற்றிகளில் இந்திய டி20 அணி சாதனைகள் படைத்திருக்கலாம். ஆனால், ஆட்டத்தை ஐபிஎல் பிடியிலிருந்து விடுவித்தால்தான் இன்னும் நிறைய விளிம்புநிலை வீரர்களும் உள்ளே வர முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்