ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்ச ‘அடிப்படை விலை’யுடன் இறங்கும் ஆஸ்திரேலிய ‘சாம்பியன்’ வீரர்கள்!

By ஆர்.முத்துக்குமார்

2023 உலகக் கோப்பையை வென்ற சாம்பியன் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான பாட் கமின்ஸ், டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க், ஜாஷ் ஹாசில்வுட், ஸ்டீவன் ஸ்மித், ஜாஷ் இங்லிஸ், ஷான் அபாட் உட்பட 25 ஆஸ்திரேலிய வீரர்கள் ரூ.2 கோடி என்னும் அடிப்படை விலையை நிர்ணயத்துடன் 2024 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்துக்குள் நுழைந்துள்ளனர்.

வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. முதல் முறையாக இந்தியாவுக்கு வெளியே ஐபிஎல் ஏலம் நடைபெறுகிறது. சாம்பியன் ஆஸ்திரேலிய வீரர்கள் அடிப்படை விலையை ரூ.2 கோடி என நிர்ணயிக்க உலகக் கோப்பையில் எழுச்சி பெற்ற நியூஸிலாந்தின் நாயக வீரர் ரச்சின் ரவீந்திராவோ தன் அடிப்படை விலையை ரூ.50 லட்சம் என்று நிர்ணயித்துள்ளார்.

அதிகபட்ச அடிப்படை விலையை நிர்ணயித்துக் கொண்ட மற்ற வீரர்களில் தென் ஆப்பிரிக்காவின் புதிய நட்சத்திரம் ஆல்ரவுண்டர் கூட்ஸீ, இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஹாரி புரூக் ஆகியோர் அடங்குவார்கள். ஹார் புரூக்கை சன் ரைசர்ஸ் அணி விடுவித்து விட்டனர். 10 உரிமையாளர்களுக்கும் பூர்த்தி செய்ய 77 இடங்கள் உள்ளன. இதில் 30 வெளிநாட்டு வீரர்களை ஏலம் எடுக்கலாம். உலகக்கோப்பையில் கலக்கிய ஸ்டார்க், ட்ராவிஸ் ஹெட், ரச்சின் ரவீந்திரா ஆகியோரை தங்கள் அணிக்குள் எடுக்க உரிமையாளர்களிடையே போட்டி உச்சம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டால் 2015-க்குப் பிறகு ஐபிஎல் தொடரில் ஆடுவார். 2018-ம் ஆண்டு ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை ரூ.9.4 கோடிக்கு ஏலம் எடுத்தது ஆனால் காயம் காரணமாக ஆட முடியாமல் போனது.

இதுவரை டிசம்பர் ஏலத்திற்கு 1166 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதிலிருந்து ஐபிஎல் அணிகள் தங்களுக்கு ஆர்வம் உள்ள வீரர்கள் பட்டியலை அனுப்பிய பின்பு இறுதிப் பட்டியல் இன்னும் சுருங்கும். இதுவரை ஆடாத அன் கேப்டு வீரர்கள் மட்டும் 909. இதில் 812 வீரர்கள் இந்தியர்கள்.

ரூ.2 கோடி அடிப்படை விலை நிர்ணயித்த வீரர்கள் விவரம்: ஹர்சல் படேல், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கேதார் ஜாதவ், முஜீப் உர் ரஹ்மான், ஷான் அபாட், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், ஸ்டீவ் ஸ்மித், முஸ்தாபிசுர் ரஹ்மான், பென்டன், ஹாரி ப்ரூக், ஜாமி டி புரூக், ஓவர்டன், அடில் ரஷித், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், லாக்கி பெர்குசன், ஜெரால்ட் கூட்ஸி, ரைலி ருசோவ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஏஞ்சலோ மேத்யூஸ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்