சான்டியாகோ: மகளிருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி சிலி நாட்டில்உள்ள சான்டியாகோ நகரில் நடைபெற்று வருகிறது. 12 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் இந்தியா ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்திய அணிதனது முதல் ஆட்டத்தில் கனடாவை 12-0 என வீழ்த்திய நிலையில் நேற்று முன்தினம் 2-வது ஆட்டத்தில் ஜெர்மனியுடன் மோதியது.
இதில் 11-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் அன்னு கோல் அடிக்க இந்தியஅணி 1-0 என முன்னிலை பெற்றது.அடுத்த 3-வது நிமிடத்தில் இந்திய அணி தனது 2-வது கோலை அடித்தது. ரோப்னி குமாரி, பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்ற இந்திய அணி 2-0 என முன்னி லை பெற்றது. விரைவாக இரு கோல்களை அடித்த இந்திய அணியின் மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை.
ஜெர்மனி வீராங்கனைகளான சோபியா ஷ்வாபே 17-வது நிமிடத்திலும், லாரா ப்ளூத் 21-வது நிமிடத்திலும் பீல்டு கோல் அடிக்க ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. 24-வது நிமிடத்தில் இந்திய அணியின் மும்தாஸ் கான் பீல்டு கோல் அடித்த அசத்தினார். இதனால் முதல் பாதியில் இந்திய அணி 3-2 என முன்னிலையில் இருந்தது.
2-வது பாதி ஆட்டம் தொடங்கிய6-வது நிமிடத்தில் லாரா ப்ளூத் பீல்டு கோல் அடிக்க ஆட்டம் 3-3 எனசமநிலையை எட்டியது. 38-வது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை அந்த அணியின் கரோலின் சீடெல் கோலாக மாற்ற ஜெர்மனி 4-3 என்ற கோல் கணக்கில் முன்னிலையை பெற்றது. இதன் பின்னர் இந்திய அணி கடுமையாக போராடிய போதிலும் கோல் அடிக்க முடியாமல் போனது.
முடிவில் ஜெர்மனி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தனது அடுத்தஆட்டத்தில் இன்று பெல்ஜியத்துடன் மோதுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago