ராய்ப்பூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 174 ரன்களை சேர்த்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டி20 ஆட்டம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஆனால், இந்த இணையை 6-வது ஓவரில் ஆரோன் ஹார்டி பிரிக்க, ஜெய்ஸ்வால் 37 ரன்களுடன் வெளியேறினார்.
அடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் 8 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் அவுட்டானது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம். 10 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 79 ரன்களைச் சேர்ந்திருந்தது. இந்த ஆட்டத்தில் டி20 போட்டிகளில் (116 போட்டிகள்) மிக வேகமாக 4 ஆயிரம் ரன்களைச் சேர்த்தவர் என்ற பெருமையை ருதுராஜ் பெற்றுள்ளார்.
நிலைத்து ஆடிய ருதுராஜை 14-வது ஓவரில் தன்வீர் சங்கா விக்கெட்டாக்க 32 ரன்களுடன் அவர் கிளம்பினார். அடுத்து ஜிதேஷ் ஷர்மா, ரிங்கு சிங் பாட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்த போராடினர். 19-வது ஓவரில் ஜிதேஷ் ஷர்மா 35 ரன்களிலும், அடுத்து வந்த அக்சர் படேல் டக் அவுட்டாகியும் ஆஸி., அணிக்கு ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை தாரைவார்த்தனர். 29 பந்துகளில் 46 ரன்களைச் சேர்ந்திருந்த ரிங்கு சிங் கடைசி ஓவரில் விக்கெட்டானார். தொடர்ந்து தீபக் சாஹர் டக் அவுட்டாக, ரவி பிஷ்னாய் ரன் அவுட் என கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 174 ரன்களை சேர்த்தது.
ஆஸ்திரேலியா அணி தரப்பில் பென் துவர்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளையும், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், தன்வீர் சங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஆரோன் ஹார்டி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் இந்தியா வென்றால் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago