புதுடெல்லி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முதன்முறையாக உகாண்டா அணி தகுதி பெற்றுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 8 டி20 உலகக்கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள், அமெரிக்க நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
அதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் அணி நேரடியாகவும், 2022 டி20 உலகக்கோப்பையில் முதல் எட்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளும், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் டி20 தரவரிசை அடிப்படையிலும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.
மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் நடைபெற்ற தகுதி சுற்றுகளின் முடிவில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன் ஆகிய 6 அணிகள் தகுதி பெற்றன.
» கணை ஏவு காலம் 50 | ஒரு தரப்புக்கு ராணுவ சட்டம் @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்
» அமீர் vs ஞானவேல்ராஜா | “படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள்” - அமீருக்கு ஆதரவாக சேரன் ட்வீட்
மேலும் கடைசி 2 அணிகளுக்கான ஆப்பிரிக்கா பிராந்திய தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் 5 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்ற நமீபியா 19-வது அணியாக தகுதி பெற்றது. மீதமுள்ள ஒரு இடத்துக்கு ஜிம்பாப்வே, உகாண்டா, கென்யா அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில் அந்தஒரு இடத்தை நிர்ணயிக்கும் கடைசி ஆட்டத்தில் உகாண்டா - ருவாண்டா அணிகள் நேற்று மோதின. நமீபியாவில் உள்ள வின்ட்ஹோயக் நகரில் இந்தப் போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்றால் முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும் என்ற சூழ்நிலையில் விளையாடிய உகாண்டா, முதலில் பேட்டிங் செய்த ருவாண்டா அணியை 65 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தது. இதையடுத்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உகாண்டா 8.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் உகாண்டா முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. உகாண்டா கிரிக்கெட் அணி, ஐசிசி தொடருக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் விவரம்: அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago