லக்னோ: சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
லக்னோவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 24-வது இடத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 36-வது இடத்தில் உள்ள சீன தைபேவின் சியா ஹாவ் லீயுடன் மோதினார். 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-23, 8-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சமீர் வர்மா 9-21, 21-7, 17-21 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் வாங் சூ வெயிடம் தோல்வி அடைந்தார்.
அதேவேளையில் மற்ற இந்திய வீரர்களான பிரியன்ஷு ரஜாவத், கிரண் ஜார்ஜ், சதிஷ்குமார் கருணாகரன் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். பிரியன்ஷு ரஜாவத் 21-17, 21-19 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் டிமிட்ரி பனாரினையும், கிரண் ஜார்ஜ் 21-16, 14-21, 21-13 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த ஷிராக் செனையும், சதிஷ்குமார் கருணாகரன் 21-8, 21-13 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் ஹுவாங் யூ-வையும் வீழ்த்தினர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 16 வயதான இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா 15-21, 21-19, 21-18 என்ற செட் கணக்கில் 77 நிமிடங்களில் போரா சகநாட்டைச் சேர்ந்த ஆகர்ஷி காஷ்யபை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். உலகத் தரவரிசையில் 79-வது இடத்தில் உள்ள உன்னதி ஹூடா 2-வது சுற்றில் முன்னாள் உலக சாம்பியனான ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவுடன் மோதுகிறார். நோசோமி ஒகுஹாரா தனது முதல் சுற்றில் 18-21, 21-17, 21-10 என்ற செட் கணக்கில் இந்தியாவின் மாளவிகா பன்சோட்டுடன் மோதுகிறார்.
» மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களை அறிவித்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி
» “விஜயகாந்த் விரைவில் பூரண உடல் நலம் பெற வேண்டும்” - இயக்குநர் அமீர்
மற்ற இந்திய வீராங்கனைகளான அனுபமா உபாத்யாயா, அஷ்மிதா சாலிஹா ஆகியோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். அனுபமா உபாத்யாயா தனது முதல்சுற்றில் 14-21, 21-15, 21-9 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் அமலி ஷூல்ஸை வீழ்த்தினார். அதேவேளையில் அஷ்மிதா சாலிஹா 21-15, 21-15 என்ற நேர் செட்டில் உக்ரைனின் பொலினா புஹ்ரோவாவை தோற்கடித்தார்.
மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ ஜோடி 21-8, 21-9 என்ற நேர் செட்டில் சகநாட்டைச் சேர்ந்த சம்ரிதி சிங், சோனாலி சிங் ஜோடியை வீழ்த்தியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago