சென்னை: சென்னையில் இன்று நடைபெற இருந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளுக்கான தமிழக அணியில் இடம் பெறுவதற்கான தேர்வு தொடர் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி வரும் 2024-ம் ஆண்டு ஜனவரி 19 முதல் 31-ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த போட்டியில் தமிழக அணிகள் சார்பில் இடம்பெறுவதற்கான வீரர்,வீராங்கனைகள் தேர்வுகள் சென்னையில் இன்று முதல் (நவம்பர் 30-ம் தேதி) டிசம்பர் 2-ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் தொடர் மழைகாரணமாக வீரர், வீராங்கனைகள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago