2024-ம் ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கை பயணம்

By செய்திப்பிரிவு

கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணி 2024-ம் ஆண்டு ஜூலையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அந்நாட்டு அரசின் தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு சமீபத்தில் தடை விதித்தது. மேலும் இலங்கையில் நடைபெற இருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரையும் தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றியது. எனினும் ஏற்கெனவே திட்டமிட்டுள்ள இருதரப்பு கிரிக்கெட் தொடர்களை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2024-ம் ஆண்டு இலங்கை அணி பங்கேற்க உள்ள போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டில் இலங்கை அணி 10 டெஸ்ட் போட்டி, 21 ஒருநாள் கிரிக்கெட் போட்டி 21 டி 20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்