ஆஸ்திரேலியாவின் அடுத்த ஆடம் கில்கிறிஸ்ட் - 64 பந்துகளில் சதம் கண்ட சாம் ஹார்ப்பர்!

By ஆர்.முத்துக்குமார்

அடிலெய்டு: விக்டோரியா அணியைச் சேர்ந்த சாம் ஹார்ப்பர் என்று அழைக்கப்படும் சாமுயெல் பிரையன் ஹார்ப்பர் என்ற வலது கை பேட்டர் மற்றும் விக்கெட் கீப்பர் 64 பந்துகளில் அதிரடி சதமடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதில் ஆச்சரியம் என்பது 64 பந்துகளில் சதம் எடுத்ததல்ல, அணி 67/5 என்று தடுமாறி கொண்டிருந்தபோது ஆடிய எதிர்த்தாக்குதல் முறைதான் ரசிகர்களின், ஆஸ்திரேலிய அணித் தேர்வுக் குழுவின், கிரிக்கெட் வல்லுநர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், ஷெஃபீல்ட் ஷீல்ட் எனும் கடினமான உள்நாட்டு தொடரின் சாதனையுமாகும் இந்த விரைவுச் சதம்.

அடிலெய்டில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான, இந்த அதிரடி சாதனை சதம் இவரை, அடுத்த 3 வடிவ வீரராக ஆஸ்திரேலிய அணிக்கு உருவாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடம் கில்கிறிஸ்டிற்குப் பிறகு சரியான விக்கெட் கீப்பர் பேட்டர் கிடைக்காமல் ஆஸ்திரேலியா தடுமாறி வருகின்றது, இப்போது சாம் ஹார்ப்பர் இதற்கான தீர்வாக எழுந்துள்ளார்.

சாம் ஹார்ப்பர் ஏற்கெனவே பிக்பாஷ் டி 20 லீகில் சில அதிரடி இன்னிங்ஸ்களை ஆடி அசத்தியவர்தான். ஆனால், இந்த இன்னிங்ஸ் ஏன் பெரிதாகப் பேசப்படுகிறது என்றால், அவர் இறங்கிய தருணம் அணி நெருக்கடியில் இருந்தது. மேலும், இது கடினமான ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடர், அதுவும் இது டெஸ்ட் போட்டி போன்ற முதல்தர கிரிக்கெட். இன்றைய ஆட்ட முடிவில் ஹார்ப்பர் 101 நாட் அவுட். விக்டோரியா அணி 187/5. அதாவது மழை காரணமாக ஆட்டத்தில் இடையூறு ஏற்பட்டதால் குறைந்த ஓவர்களே இன்று சாத்தியமாயின.

இந்த இன்னிங்ஸில் நேதன் மெக் ஆண்ட்ரூ வீசிய ஒரே ஓவரில் 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகளுடன் 26 ரன்களையும் விளாசினார் ஹார்ப்பர். மிட்விக்கெட்டில் தூக்கி அடித்த பெரிய சிக்சர்தான் இவர் சதத்தைக் கடக்கச் செய்த சிக்ஸ் என்பதோடு, ஷெஃபீல்ட் ஷீல்ட் வரலாற்றில் 3வது அதிவேக சதமாகவும் அமைந்தது.

டெஸ்ட் போட்டிகளில் டேவிட் வார்னர் இடத்தைப் பிடிக்க ஆஸ்திரேலியாவில் போட்டாப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரான மார்கஸ் ஹாரிஸ் சரியாக ஆடவில்லை 10 பந்துகளையே அவர் தாக்குப்பிடித்து 3 ரன்களில் ஆட்டமிழந்தார். வார்னர் இடத்துக்கு மேத்யூ ரென்ஷா மற்றும் பேங்கிராப்ட் ஆகியோரும் கடும் போட்டியில் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருமே பாகிஸ்தான் அணி அடுத்த வாரம் ஆஸ்திரேலியா செல்லும்போது பிஎம் லெவன் அணியில் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இந்தியாவுக்கு எதிராக அறிமுகம் ஆகி அரைசதம் கண்ட வில் பியூகோவ்ஸ்கி என்ற வீரரும் போட்டியில் இருக்கிறார். ஆனால், அவர் இப்போது தொடர்ச்சியாக குறைந்த ஸ்கோர்களையே எடுத்து வருகிறார்.

சாம் ஹார்ப்பரோடு இன்னொரு எழுச்சியுறும் நட்சத்திரமாக ஆலி டேவிஸ் என்பவரும் ஆஸ்திரேலிய எதிர்கால அணியின் நட்சத்திரங்கள் ஆவார்கள் என்று பெரிதும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், 64 பந்துகளில் வந்த சதம், சாம் ஹார்ப்பரின் வாய்ப்புகளை பிரகாசமாக்கியுள்ளது என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்