ஐஎஸ்எல் கால்பந்து தொடர் | சென்னை - கேரளா நாளை பலப்பரீட்சை

By செய்திப்பிரிவு

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கொச்சி நேரு விளையாட்டரங்கில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னையின் எப்சி இந்த சீசனில் 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு டிரா, 4 தோல்விகளுடன் 7 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.கடைசியாக ஈஸ்ட் பெங்கால்அணிக்கு எதிரான ஆட்டத்தைசொந்த மைதானத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது சென்னை அணி.

கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 16 புள்ளிகளை குவித்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஹாட்ரிக் வெற்றிகளுடன் அந்த அணி நாளைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது. ஐஎஸ்எல் வரலாற்றில் இரு அணிகளும் 20 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் சென்னை அணி 6 ஆட்டங்களிலும், கேரளா 6 ஆட்டங்களிலும் வெற்றி கண்டிருந்தன. 8 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்திருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்