முகேஷ் குமார் தான் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த ஷமி - ரவிச்சந்திரன் அஸ்வின் புகழராம்

By செய்திப்பிரிவு

மும்பை: வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார்தான் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த ஷமி என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணி களுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முகேஷ் குமார் அபாரமாக பந்துவீசினார். அவர் விக்கெட்களை வீழ்த்தவில்லையென்றாலும், அபாரமாக பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்நிலையில் முகேஷ் குமாரை வெகுவாகப் பாராட்டியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

அவர் கூறியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் முகேஷ் குமார் சிறப்பாக பந்துவீசினார்.

இந்தியாவின் அடுத்த ஜூனியர் ஷமி போல் வருவார் முகேஷ் குமார். குறிப்பாக முதல் போட்டியில் அனைத்து இந்திய பந்துவீச்சாளர்களும் அதிக ரன்களை வாரி வழங்கினர். ஆனால் முகேஷ் குமார் மட்டும் 4 ஓவரில் 29 ரன்கள் மட்டும் கொடுத்து அசத்தலாக பந்து வீசினார்

முகேஷ் குமாரும் ஷமியைப் போலவே உயரத்தையும், மணிக்கட்டு பொசிஷனையும் கொண்டு பேக் ஆஃப் ஸ்பின் பந்துகளை சிறப்பாக வீசுகிறார். மேலும் அவரிடம் சரியான கோணத்தில் பந்துவீசும் திறமையும் இருக்கிறது. அவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்