கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023: நவ.30 முதல் தமிழக அணிக்கான தேர்வுகள்

By செய்திப்பிரிவு

சென்னை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளுக்கான தமிழக அணியில் இடம் பெறுவதற்கான தேர்வு வரும் நவ.30-ம் தேதி முதல் சென்னையில் நடைபெறவுள்ளது. இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதற்காக மத்திய அரசின் சார்பில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2023-ம் ஆண்டுக்கான கேலோ போட்டியை தமிழகத்தில் நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் 2024 ஜன.19 முதல் ஜன.31 வரை நடைபெறும் கேலோ போட்டிகளில் 5 ஆயிரத்தும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதையொட்டி போட்டிகளில் தமிழக அணிகள் சார்பில் இடம்பெறுவதற்கான தேர்வுகள் சென்னையில் நவ. 30, டிச.1, 2 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது. ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், பெண்களுக்கான கூடைப்பந்து அணிக்கு டிச.1-ம் தேதியும், ஆண்கள் அணிக்கு டிச.2-ம் தேதியும், பெண்கள் கால்பந்து அணிக்கு நவ.30-ம் தேதியும், ஆண்கள் அணிக்கு டிச.1-ம் தேதியும் காலை 7 மணி அளவில் வீரர்கள் தேர்வு நடத்தப்படுகின்றன.

அதேபோல நேரு பூங்கா, மாவட்ட விளையாட்டு வளாகத்தில் பெண்களுக்கான கபடி மற்றும் கோ-கோ அணிக்கு நவ.30-ம் தேதியும், ஆண்கள் அணிக்கு டிச.1-ம் தேதியும், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் பெண்களுக்கான வாலிபால் மற்றும் ஹாக்கி அணிக்கு நவ.30-ம் தேதியும், ஆண்கள் அணிக்கு டிச.1-ம் தேதியும் காலை 7 மணிக்கு வீரர்கள் தேர்வு நடத்தப்படுகின்றன. இதில் தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தகுந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்