வதோதரா: 17 வயதுக்கு உட்பட்டோருக்கான யுடிடி தேசிய தரவரிசை டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள சாமா உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தமிழகத்தின் பாலமுருகன், மகாராஷ்டிராவைச் சேர்ந்த குஷால் சோப்டாவை எதிர்த்து விளையாடினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாலமுருகன் 11-6, 14-12, 11-8 என் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். தேசிய தரவரிசை டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் பாலமுருகன் தொடர்ச்சியாக வென்றுள்ள 3-வது பட்டம் இதுவாகும்.
17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் பிரிவில் மேற்கு வங்கத்தின் சிண்ட்ரலா தாஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர், 11-2, 9-11, 11-5, 11-6 என்ற செட் கணக்கில் சகமாநிலத்தை சேர்ந்த சான்வி ராயை தோற்கடித்தார். சாம்பியன் பட்டம் வென்ற பாலமுருகன், சிண்ட்ரலா தாஸ் ஆகியோருக்கு தலா ரூ.24 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago