ஷென்ஸென்: சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டனின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இரட்டையர் பிரிவில் சாட்விக்-ஷிராக் ஜோடி கால் இறுதி சுற்றில் கால்பதித்தது.
சீனாவின் ஷென்ஸென் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய், 32-ம் நிலை வீரரான டென்மார்க்கின் மாக்னஸ் ஜோஹன்னசனை எதிர்த்து விளையாடினார். 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரனோய் 21-12, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். கால் இறுதியில் 5-ம் நிலை வீரரான ஜப்பானின் கோடை நரோகாவுடன் மோதுகிறார் பிரனோய்.
ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது ஜப்பானின் அகிரா கோகா, தாய்ச்சி சைடோ ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சாட்விக் - ஷிராக் ஜோடி 21-15, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் கால்பதித்தது. கால் இறுதியில் சாட்விக் - ஷிராக் ஜோடியானது இந்தோனேஷியாவின் லியோ ரோலி கர்னாண்டோ, டேனியல் மார்ட்டின் ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago