ஆறு வாரங்கள் போனதே தெரியாமல் நடந்த விறுவிறுப்பான 2023 உலகக் கோப்பைப் போட்டித்தொடர் பாட் கமின்ஸ் தலைமை ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் ஆனதோடு நிறைவுற்றது. இந்தத் தொடரின் சிறந்த லெவனாக விஸ்டன் கிர்க்கெட் இணையதளம் ஒரு அணியைத்தேர்வு செய்துள்ளது, அதில் 6 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் வெற்றிக் கேப்டன் பாட் கமின்ஸ் இந்த அணியிலேயே இல்லை என்பது பெரிய நகைமுரண்.
விஸ்டன் உலகக்கோப்பை 2023 சிறந்த அணியின் வீரர்கள் வரிசை வருமாறு:
1. ரோஹித் சர்மா 2023 உலகக்கோப்பையில் 597 ரன்கள் சராசரி 54.27, ஸ்ட்ரைக் ரேட் 125.94.
ரோஹித் சர்மா 2019 உலகக்கோப்பையில் 5 சதங்களை எடுத்தார். இந்த உலகக்கோப்பையில் ‘பாஸ்பால்’ பாணியில் ரோஹித் கொடுத்த தொடக்கம் இந்திய அணியின் வெற்றிகளில் பெரும்பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. பவர் ப்ளேயில் அதிக ரன்களக் குவித்த வீரராகவும் ரோஹித் சர்மா திகழ்ந்தார். இவரது ஆக்ரோஷமான பேட்டிங்கினால் விராட் கோலி ஒரு முனையில் நின்று அணியை வழிநடத்த முடிந்தது இந்திய அணியின் பெரும்பலமாகத் திகழ்ந்தது. கேப்டன்சியிலும் ரோஹித் சர்மா பலப் படிக்கட்டுகளைக் கடந்து வந்துள்ளார்.
» ஐசிசி தரவரிசையில் விராட் கோலி முன்னேற்றம்
» ஸ்குவாஷ் தேசிய சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினர் வேலவன் செந்தில்குமார், அனாஹத்
2. ட்ராவிஸ் ஹெட்: 2023 உலகக்கோப்பையில் 329 ரன்கள் சராசரி 54.83. ஸ்ட்ரைக் ரேட் 127.51. இவர் இந்த உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியில் பிற்பாடே இணைந்தார், ஆனால் இவரது வருகை ஆஸ்திரேலிய அணியின் ஸ்பிரிட்டையே எழுச்சி பெறச் செய்தது என்றால் மிகையாகாது, வந்தவுடனேயே நியூஸிலாந்தைப் போட்டு துவம்சம் செய்தார். பிறகு அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் ஆட்ட நாயகனாகத்தேர்வு செய்யப்பட்டார்.
3. விராட் கோலி: 2023 உலகக்கோப்பையில் விராட் கோலி 765 ரன்கள் எடுத்தார். சராசரி 95.62, ஸ்ட்ரைக் ரேட் 90.31. இந்த உலகக்கோப்பையின் பிராட்மேன் என்று கோலியை வர்ணிக்கலாம். ஒரே உலகக்கோப்பையில் அதிக ரன்கள் என்ற சச்சின் டெண்டுல்கரின் (673) சாதனையை உடைத்தெறிந்தார், 50வது ஒருநாள் சதம் எடுத்து உலக சாதனை புரிந்தார். 3 சதங்கள், 6 அரை சதங்கள் எடுத்தார். விராட் கோலியைப் பொறுத்தவரை இது வரலாற்று உலகக்கோப்பையாகும்.
4. டேரில் மிட்செல்: 552 ரன்கள், சராசரி 69, ஸ்ட்ரைக் ரேட் 111.06.
எல்லா வடிவங்களிலும் டேரில் மிட்செலைப் போல சீராக ரன் அடிக்கும் வீரர்கள் ஒருசிலரே உள்ளனர். இந்த உலகக்கோப்பையில் சிறந்த இரண்டு இன்னிங்ஸை ஆடினார். இந்தியாவுக்கு எதிரான அவரது இரண்டு ஆட்டங்களில் முறையே 130 மற்றும் 134 ரன்கள் எடுத்தார். மும்பையில் நடந்த அரையிறுதியில் அந்த சதம் ஆடவர் உலகக் கோப்பை அரையிறுதியில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஸ்கோராகும்.
5. கே.எல்.ராகுல் (வி.கீ): 2023 உலகக்கோப்பையில் 452 ரன்கள் சராசரி 75.33, ஸ்ட்ரைக் ரேட் 90.76. ஒரு சதம், 2 அரைசதங்கள்.
6. கிளென் மேக்ஸ்வெல்: 400 ரன்கள், சராசரி 66, ஸ்ட்ரைக் ரெட் 150. 2 சதங்கள்.
7. ரவீந்திர ஜடேஜா: 16 விக்கெட்டுகள். ஒருமுறை 5 விக்கெட்டுகள். ரன்கள் 120, ஸ்ட்ரைக் ரேட் 101.69.
8. ஜெரால்ட் கூட்ஸீ (தெ.ஆ): 20 விக்கெட்டுகள் சராசரி 19. சிறந்த வீச்சு 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள்.
9. முகமது ஷமி: 24 விக்கெட்டுகள் சராசரி 10.70, மூன்று முறை 5 விக்கெட்டுகள், அரையிறுதியில் 7/57.
10. ஆடம் ஜாம்ப்பா: 23 விக்கெட்டுகள். சிறந்த வீச்சு 4/8.
11. ஜஸ்பிரித் பும்ரா: 20 விக்கெட்டுகள், சராசரி 18.65. சிறந்த வீச்சு 4/39.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 min ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago