ரியோ டி ஜெனிரோ: 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இதில் தென் அமெரிக்க பிராந்தியத்தை சேர்ந்த அணிகளுக்கான தகுதி சுற்றில் பிரேசில் - அர்ஜெண்டினா நேற்று புகழ் பெற்ற ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில் நடைபெற்றது.
லயோனல் மெஸ்ஸி, பிரேசில் மண்ணில் விளையாடும் கடைசி போட்டியாக இது இருக்கக்கூடும் என்பதால் இந்த ஆட்டத்தை காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்திருந்தனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மைதான கேலரியில் இருநாட்டு ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அதனை கட்டுப்படுத்த முயன்றனர். இதில் அர்ஜென்டினா ரசிகர்கள் தாக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி வீரர்கள் மைதானகேலரி அருகே விரைந்து சென்று மோதலை நிறுத்துமாறு ரசிகர்களிடம் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் மோதல் நிற்காததால் வீரர்கள் ஆட்டக்களத்தில் இருந்து வெளியேறினர். சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டம்மீண்டும் தொடர்ந்தது. முதல் பாதியில் இருஅணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.
63-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் நிக்கோலஸ் ஓட்டமெண்டி கோல் அடித்து அசத்தினார். கார்னரில் இருந்து செல்சோ உதைத்த பந்தை கோல்கம்பத்துக்கு அருகே நின்ற நிக்கோலஸ் ஓட்டமெண்டி இரு டிபன்டர்களுக்கு ஊடாக துள்ளியவாறு தலையால் முட்டி கோல் வலைக்குள் திணித்தார். இதனால் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
» ஆஸ்திரேலியாவுடன் டி 20-ல் இன்று மோதல் - வெற்றியுடன் தொடங்குமா இளம் இந்திய அணி?
» பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக உமர் குல், சயீத் அஜ்மல் நியமனம்
பிரேசில் அணியால் கடைசி வரை போராடியும் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. இதனால் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அர்ஜெண்டினா அணிக்கு இது 5வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 6 ஆட்டங்களில் விளையாடி ஒரு தோல்வி, 5 வெற்றிகளுடன் 15 புள்ளிகள் குவித்து 10 அணிகள் பங்கேற்றுள்ள தென் அமெரிக்க கண்டங்களைச் சேர்ந்த நாடுகளுக்ககான தகுதி சுற்றில் முதலிடம் வகிக்கிறது. 3-வது தோல்வியை சந்தித்துள்ள பிரேசில் 7 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.
2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெறுகிறது. இதில் 48 அணிகள் கலந்துகொள்கின்றன. தகுதி சுற்றில் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள 10 அணிகளில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறும். 7-வது இடத்தை பெறும் அணி கண்டங்களுக்கு இடையேயான பிளே ஆஃப் சுற்றில் விளையாடும். அந்த வெற்றி பெற்றால் உலகக் கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை பெறலாம். தென் அமெரிக்க நாடுகளின் 7-வது மற்றும் 8-வது தகுதி சுற்று ஆட்டங்கள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago