மைதானத்தில் இரு நாட்டு ரசிகர்களிடையே கைகலப்பு: பிரேசிலை வென்ற மெஸ்ஸி அண்ட் கோ!

By செய்திப்பிரிவு

ரியோ: எதிர்வரும் 2026 கால்பந்து உலகக் கோப்பை தொடர் கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இந்த தொடருக்கான தகுதி சுற்றுப் போட்டிகளில் தற்போது சர்வதேச கால்பந்து அணிகள் விளையாடி வருகின்றன. அந்த வகையில் தென் அமெரிக்க பிராந்தியத்தை சேர்ந்த அணிகளுக்கான தகுதி சுற்றில் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணிகள் விளையாடின.

இந்தப் போட்டி பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் நடைபெற்றது. இருநாட்டு அணியின் வீரர்களும் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மைதானத்தில் அணிவகுத்து நின்றனர். அப்போது பார்வையாளர் மாடத்தில் திரண்டிருந்த இருநாட்டு ரசிகர்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அதனை கட்டுப்படுத்த முயன்றனர். இதில் அர்ஜென்டினா ரசிகர்கள் தாக்கப்பட்டதாக தெரிகிறது.

அதை கவனித்த மெஸ்ஸி மற்றும் அணியினர் இந்த சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்று மோதலை நிறுத்துமாறு ரசிகர்களிடம் வலியுறுத்தி உள்ளனர். அது தொடர்ந்த பட்சத்தில் ஆட்டக்களத்தில் இருந்து வெளியேறினர்.

மோதலில் ஈடுபட்ட ரசிகர்கள்

சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு நிலைமை கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு மீண்டும் ஆடுகளத்துக்கு அர்ஜென்டினா வீரர்கள் திரும்பினர். இந்தப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இந்த சம்பவத்தால் மைதானம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

உலகக் கோப்பை தகுதி சுற்றில் தென் அமெரிக்க பிராந்தியத்தை சேர்ந்த அணிகளுக்கான புள்ளிகள் பட்டியலில்15 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது அர்ஜென்டினா. பிரேசில் அணி 7 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.

ரசிகர்கள் மோதலை தடுக்க விரைந்த மெஸ்ஸி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE