90 நிமிடங்களுக்குப் பிறகு 2 கோல்கள்: அல்ஜீரியாவை வெளியேற்றி காலிறுதியில் ஜெர்மனி

By ஆர்.முத்துக்குமார்

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் அல்ஜீரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

92வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஆந்த்ரே ஸ்கர்லி முதல் கோலை ஜெர்மனிக்காக அடிக்க, பிறகு கூடுதல் நேரத்தில் 119வது நிமிடத்தில் ஜெர்மனியின் மெசூட் ஓசில் வெற்றி கோலை அடித்தார். 120வது நிமிடத்தில் அல்ஜீரியா வீரர் அப்டெல்மௌமீனி ஒரு ஆறுதல் கோலை அடித்தார்.

அன்று மெக்சிகோ கோல் கீப்பர் ஓச்சாவை நம்பியே களமிறங்கியது போல், அல்ஜீரியாவும் கோல் கீப்பரை நம்பியே களமிறங்கியது. அவர் தடுத்து வெளியேற்றுவார் உடனே கார்னர் இப்படியே சென்று கொண்டிருந்தால் எவ்வளவு நேரம் ஜெர்மனியின் ஸ்ட்ரைக்கர்களைத் தடுத்து நிறுத்திக் கொண்டே இருக்க முடியும்?

போர்ச்சுகல் அணிக்கு எதிராக 4-0 என்ற கோல் கணக்கில் என்று வெடித்துக் கிளம்பிய ஜெர்மனி, கானாவின் சவாலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் போராடி ட்ரா செய்தது. யு.எஸ். அணியுடன் திருப்தி தராத வெற்றி பெற்றது.

நாக் அவுட் சுற்றில் அல்ஜீரியாவை நிச்சயம் எளிதில் வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முடியவில்லை.

இடைவேளைக்கு முன்பாக நிச்சயமாக அல்ஜீரியா ஜெர்மனியைக் காட்டிலும் சிறப்பாக ஆடியது என்றே கூறவேண்டும்.

அல்ஜீரியா ஒரு கோலையும் அடித்திருக்கும், கவ்லம் அடித்த அபாரமான கிராஸை ஸ்லிமானி தலையால் முட்டினார் ஆனால் மிகச்சரியாக அது ஆஃப் சைடு என்று நடுவரால் மறுக்கப்பட்டது. பிறகு கவ்லம் ஒரு ஷாட்டை ஆட அது கோலுக்கு வைடாகச் சென்றது. மீண்டும் மெஹ்தி மொஸ்தஃபா அடித்த ஷாட்டை ஜெரோம் போடெங் திசைத் திருப்பி விட்டார். இவ்வாறு அல்ஜீரியா ஜெர்மனியை கதிகலங்க அடித்தது.

இடைவேளைக்குச் சற்று முன்னரே, ஜெர்மனி தன் ஆட்டத்தைக் கைப்பற்றிக்கொண்டது. 41வது நிமிடத்தில் ஜெர்மனி தாக்குதல் ஒன்றில் டோனி குரூஸ் கோல் நோக்கி அடித்த ஷாட்டை அல்ஜீரிய கோல் கீப்பர் ரைஸ் மபோல்ஹி தாழ்வாகத் தடுத்தார். ஆனால் பந்து ரீபவுண்ட் ஆகி ஜெர்மனி வீரர் மரியோ கூட்ஸியிடம் செல்ல அவர் அதனை கோலுக்குள் அடிக்க முயன்றார் ஆனால் இம்முறையும் அல்ஜீரிய கோல் கீப்பர் அற்புதமாகத் தடுத்தார்.

இடைவேளைக்குப் பிறகு ஜெர்மனி கள அமைப்பில் சிறு மாற்றம் செய்தது. வலது புறம் கூட்ஸிக்குப் பதிலாக ஸ்கர்லி வந்தார். இதனால் ஓசில் இடமும் மாறியது. இது ஏறக்குறைய கோலைப் பெற்றுக் கொடுத்திருக்கும் ஆனால் ஷாட் வைடாகச் சென்றது.

அல்ஜீரியாவும் எதிர்த்தாக்குதல் தொடுத்தது. அந்த அணியின் ஸ்லிமானி அபாரமாக ஆடினார். திடீரென எழுச்சியுற்று பந்தை ஜெர்மனி பகுதிக்குள் இவர் கொண்டு சென்றது அருமையான காட்சியாகும், ஆனால் ஷாட்டை அருமையாக அடித்தும் ஜெர்மனி வீரர் நியூயரைக் கடக்க முடியவில்லை.

தாமஸ் முல்லருக்கு தன் கோல் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு வந்தது, ஆனால் அல்ஜீரிய கோல் கீப்பர் மீண்டும் தடுத்து நிறுத்தினார்.

90 நிமிடங்கள் முடியும் தறுவாயில், மீண்டும் முல்லர் உள் நுழைந்தார் ஆனால் கோல் விழவில்லை. பிறகு ஜெர்மனி வீரர் லாம் அடித்த ஷாட்டை ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் தலையால் அடிக்கும் வாய்ப்பைக் கோட்டை விட்டார்.

கூடுதல் நேர கோல்கள்:

கூடுதல் நேரத்தில் முதலில் ஜெர்மனி கோல் அடித்தது. தாமஸ் முல்லர் கோல் அடிக்காவிட்டாலும் இந்த கோலுக்கு இவர்தான் பிரதான காரணம். தாமஸ் முல்லர் அடித்த ஷாட் பெனால்டி பகுதிக்குள் சென்றது, அங்கு ஆந்த்ரே ஸ்கர்லி 6 யார்டுகளுக்கு முன்னால் நின்று கொண்டு அல்ஜீரிய கோல் கீப்பரின் கண்ணைக்கட்டி கோலுக்குள் செலுத்தினார். ஜெர்மனி 1-0.

118வது நிமிடத்தில் ஸ்லிமானிக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது, ஆனால் ஜெர்மனியின் தடுப்பாட்ட வீரர் கெரோமி போடெங் அவரிடமிருந்து பந்தைப் பிடுங்கிச் சென்றார்.

ஆட்டத்தின் 119வது நிமிடம், ஜெர்மனி எதிர்த் தாக்குதல் நடத்தியது. ஜெர்மனி வீரர் ஓசில் இடது புறம் பந்தை எடுத்து சென்று பக்கவாட்டில் வந்து கொண்டிருந்த ஸ்கர்லிக்குப் பந்தை பாஸ் செய்தார், அவர் கோல் கீப்பரைக் கடைந்து எடுத்து கோலை நோக்கி அடிக்க அது லைனில் தடுக்கப்படுகிறது. ஆனால் பந்து மீண்டும் ஓசிலிடம் வர அவர் அதனை 2வது கோலாக மாற்றினார்.

அல்ஜீரியாவிடமிருந்து ஆட்டத்தை 2வது கோல் அடித்து ஓசில் ஜெர்மனிப்பக்கம் கைப்பற்ற, கடைசியில் அல்ஜீரியாவின் ஃபெகவ்லி வலது புறத்திலிருந்து ஒரு அருமையான் பாஸை அடிக்க, அதனை டிஜாபு அருமையாக கோலாக மாற்றினார் ஆனால் பயன் இல்லை. அல்ஜீரியா வெளியேறியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்