ODI WC Final | இந்திய அணியை வாழ்த்திய குத்துச்சண்டை வீரர் ஃபிளாயிட் மேவெதர்!

By செய்திப்பிரிவு

நியூயார்க்: பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் ஃபிளாயிட் மேவெதர், கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதி ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியை வாழ்த்தியுள்ளார். அவர் வாழ்த்து சொல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை அன்று ஆஸ்திரேலிய அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. இந்த ஆட்டம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுவதன் மூலம் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது இந்தியா. இந்தியா மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகின் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் இந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இந்த சூழலில் ஃபிளாயிட் மேவெதர், இந்திய அணியை பாராட்டி உள்ளார்.

“இந்திய அணிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாட சிறந்த வீரர்களை கொண்டுள்ள அணி” என ஃபிளாயிட் மேவெதர் தெரிவித்துள்ளார்.

தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் தொடர்ச்சியாக 50 வெற்றிகளை பெற்றவர் மேவெதர். இதில் 27 போட்டிகளை நாக்-அவுட் செய்து வென்றுள்ளார். முன்னதாக, இந்திய அணிக்கு ஜெர்மனி நாட்டு கால்பந்தாட்ட வீரர் தாமஸ் முல்லர் வாழ்த்தி இருந்தார். அதே போல இந்தியா - நியூஸிலாந்து இடையிலான போட்டியை முன்னாள் கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்கம், மும்பை மைதானத்துக்கு வருகை தந்து பார்த்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்