ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் நவீன் உல்-ஹக் தெரிவித்துள்ளார்.
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது ஆப்கானிஸ்தான் அணி. இந்தத் தொடரில் 4 வெற்றி, 5 தோல்வியுடன் அரைஇறுதி வாய்ப்பை இழந்து ஆப்கானிஸ்தான் அணி வெளியேறியுள்ளது. இந்த போட்டியில் முன்னாள் உலக சாம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்தது.
இந்நிலையில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல்-ஹக் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் 8 விக்கெட்களைச் சாய்த்திருந்தார்.
அதேநேரத்தில் 20 ஓவர் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக தொடர்ந்து விளையாடுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
24 வயதான நவீன் உல்-ஹக் ஆப்கானிஸ்தான் அணிக்காக 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்களையும், 27 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago