லாகூர்: வீரர்களை எப்படி உருவாக்க வேண்டும் என்பதை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தெரிவித்துள்ளார்.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதிவருகின்றன. பாகிஸ்தான் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடம் வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும், அரை இறுதி சுற்றுக்கு முன்னேறுவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை தொடரில் இருந்து கிட்டத்தட்ட பாகிஸ்தான் வெளியேறிய நிலைதான்.
இந்த பெரும் தோல்வியால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் பூகம்பம் வெடித்துள்ளது. பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அஸம் - அந்நாட்டு கிரிக்கெட் சங்கத் தலைவருக்கும் இடையேயான மோதல்தான் அந்நாட்டின் அரசியலையும் மிஞ்சிய பேசுபொருளாக உள்ளது. இதனால் முன்னாள் வீரர்கள் பலரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அதில் ஒருவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்.
தனியார் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற சோயப் மாலிக் பேசுகையில், “இந்த உலகக் கோப்பையில், இந்தியா அனைத்து அம்சங்களிலும் சிறப்பாக உள்ளது. நான் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் மட்டும் பற்றி குறிப்பிடவில்லை. தொடரில் இந்திய வீரர்களும் காயங்கள் அடைந்தனர். ஆனால், அதற்கும் மாற்று திட்டத்தையும் இந்திய கிரிக்கெட் வாரியம் வைத்திருந்தது. இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஃபார்மட்டிலும் பெரிய வீரர்களை பாகிஸ்தான் உருவாக்க வேண்டும்” என்று வலியறுத்தினார்.
» “இந்திய ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!” - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம்
» சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நவ.21 முதல் தேசிய பில்லியர்ட்ஸ் போட்டி
இதே டிவி நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக், "அணி வெற்றி பெற்றால் நன்றாக செயல்பட்டால் ஏன் உங்களை குறை சொல்ல போகிறார்கள். நீங்கள் தொடர் வெற்றியே பெற்றாலும்கூட, முன்னேற்றம் என்பது இருக்க வேண்டும். நல்ல அணிகளுக்கு எதிராக நல்ல போட்டிகளில் விளையாடும்போதே முன்னேற்றத்தை ஏற்படுத்தும்" என்று வலியுறுத்தினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago