இங்கிலாந்து அணியுடன் இன்று மோதல்: சாத்தியம் இல்லாத வெற்றியை பெறுமா பாகிஸ்தான்?

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

பாகிஸ்தான் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடம் வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறுவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகவே அமையக்கூடும். ஏனெனில் கடைசி அணியாக அரை இறுதிக்குள் நுழைவதற்கான வாய்ப்பை நியூஸிலாந்து வலுப்படுத்திக் கொண்டுள்ளது.

லீக் சுற்றை அந்த அணி 10 புள்ளிகளுடன் நிறைவு செய்துள்ளது. மேலும் நிகர ரன் ரேட் +0.743-ஐ கொண்டிருப்பது நியூஸிலாந்துக்கு பெரிய அளவில் சாதகமாக உள்ளது. அதேவேளையில் இது +0.036 நிகர ரன் ரேட்டை கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு பாதகமாகி உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 287 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதேவேளையில் இலக்கை துரத்தும் போது 284 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற வேண்டும்.

இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்பதால் பாகிஸ்தான் அணியின் அரை இறுதி வாய்ப்பு என்பது கைகூடாமலே போகக்கூடிய சூழ்நிலை உள்ளது. அதே வேளையில் நடப்பு சாம்பியனான இங்கி லாந்து அணி ஏற்கெனவே அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறுவதில் முனைப்பு காட்டக்கூடும்.

நடப்பு உலகக் கோப்பை தொடரின் புள்ளிகள் பட்டியலில் இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து, ஆகிய 4 அணிகளும் தலா 4 புள்ளிகளை பெற்றுள்ளன. இந்த அணிகள் முறையே 7 முதல் 10-வது இடங்களில் உள்ளன. இலங்கை அணி 9 ஆட்டங்களை விளையாடி லீக் சுற்றை முடித்துவிட்டது. வங்க தேசம், நெதர்லாந்து ஆகிய இரு அணிகளும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் முறையே வலுவான ஆஸ்திரேலியா, இந்தியாவை சந்திக்கின்றன. இந்த இரு அணிகளும் இங்கிலாந்தை விட குறைவான நிகர ரன் ரேட்டை கொண்டுள்ளன. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றால் இங்கிலாந்து அணி புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தை தக்கவைத்தபடி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் தகுதி பெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்