அரை இறுதிக்கு தகுதி பெற பாகிஸ்தானுக்கு தேவை அசாத்திய வெற்றி!

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி சுற்றுக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன. அடுத்த சுற்றுக்கு நான்காவது அணியாக முன்னேற உள்ள அணி எது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நேற்று, பெங்களூருவில் இலங்கையை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வீழ்த்தியது. இதன் மூலம் அந்த அணிக்கு நாக்-அவுட் சுற்றில் நான்காவது அணியாக முன்னேறும் வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது. அதே நேரத்தில் நான்காவது அணியாக பாகிஸ்தானும் முன்னேறும் வாய்ப்பு உள்ளது. ஆனால், நாளை (சனிக்கிழமை) கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி, அசாத்திய வெற்றியை பெற வேண்டும்.

பாகிஸ்தான், 287 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வெல்ல வேண்டும். அல்லது இங்கிலாந்தை 150 ரன்களுக்குள் சுருட்டி, அந்த இலக்கை 3.4 ஓவர்களில் எட்ட வேண்டும். அதன் மூலம் நியூஸிலாந்தை ரன் ரேட் அடிப்படையில் முந்தலாம். அப்படி இல்லாமல் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூஸிலாந்து அரை இறுதியில் விளையாடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE