கொல்கத்தா: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் கோலியின் சாதனை சதத்தின் உதவியுடன் இந்திய அணி 326 ரன்கள் குவித்துள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வரும் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மாவும் ஷுப்மன் கில்லும் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். ரோகித் சர்மா 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டாக வெளியேறினார்.
ஷுப்மன் கில் 24 பந்துகளில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் கோலியுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயஸ் ஐயர் பொறுப்பாக ஆடி ரன்களைக் குவித்தனர். இருவரும் ஓவருக்கு 6 ரன்கள் ரேட்டைக் குறையாமல் பார்த்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பாக ஆடிய இருவரும் அடுத்தடுத்து அரை சதம் அடித்தனர். 77 ரன்களை எடுத்திருந்த ஸ்ரேயஸ் இங்கிடி ஓவரில் கேட்சாகி வெளியேறினார்.
இதனால், 34 ஓவரில் இந்திய அணி 200 ரன்களைக் கடந்தது. இதன்பின்னர் வந்த கே.எல்.ராகுல் 8 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 22 ரன்களிலும் தங்களது விக்கெட்டைப் பறிகொடுத்தனர். விக்கெட் சரிவுக்கு மத்தியிலும் நிதானமாக விளையாடிய கோலி தனது 49-வது சதத்தை பதிவு செய்து, சச்சினின் 49 சதங்கள் சாதனையை சமன் செய்தார்.
» ODI WC 2023 | சதத்தை நோக்கி முன்னேறும் கோலி - இந்தியா 245/3
» ODI WC 2023 | அரையிறுதிக்கு தென் ஆப்பிரிக்கா தகுதி - தொடரில் இருந்து வெளியேறியது இங்கிலாந்து
இறுதிக் கட்டத்தில் ஜடேஜா அதிரடியாக விளையாடி 29 ரன்கள் சேர்த்து உதவ நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை குவித்தது. விராட் கோலி 101 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் இங்கிடி,ரபாடா, கேசவ் மகாராஜ், ஷம்சி, ஜேன்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago