ஐபிஎல் தொடரில் ரூ.41,500 கோடி முதலீடு செய்ய சவுதி அரேபியா விருப்பம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கால்பந்து, கோல்ஃப் உள்ளிட்ட தொழில்முறை விளையாட்டுகளில் சவுதி அரேபியா தொடர்ந்து முதலீட்டை அதிகரித்து வருகிறது. அதற்கு கிடைத்த வரவேற்பினைத் தொடர்ந்து தற்போது கிரிக்கெட்டில் அதிகம் லாபம் ஈட்டும் தொடரான ஐபிஎல் பக்கம் சவுதி அரேபியாவின் கவனம் திரும்பியுள்ளது.

அதன் அடிப்படையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் ஆலோசகர்கள் ஐபிஎல்லை 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஹோல்டிங் நிறுவனமாக மாற்றுவது குறித்து இந்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த செப்டம்பரில் சவுதி இளவரசர் இந்தியாவுக்கு வந்தபோது இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அப்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின்படி, இங்கிலீஷ் பிரிமீயர் லீக் அல்லது யூரோப்பியன் சாம்பியன் லீக்கைப் போலவே ஐபிஎல் லீக்கிலும் 5 பில்லியன் டாலரை அதாவது ரூ.41,500 கோடியை முதலீடு செய்ய சவுதி அரேபியா சார்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இது, இந்தப் போட்டிகளை பிறநாடுகளுக்கும் விரிவாக்கம் செய்ய உதவும் என்று கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் முதலீட்டு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு தேவையான அழுத்தத்தை கொடுக்க சவுதி ஆர்வமாக உள்ள நிலையில் பிசிசிஐயும் அடுத்த ஆண்டு இந்த முன்மொழிவுக்கு அழைப்பு விடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE